தமிழகத்தில் , திருவள்ளூர், நீலகிரி, கோவை உட்பட 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை , சென்னை மாநில ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: இன்று மாலை 05.30 மணி அளவில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள வடக்கு மேற்கு வங்க கடல் பகுதிகளில், வட ஆந்திர- தெற்கு ஒரிசா கடலோரப் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதை அடுத்து 24 மணி நேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடக்கு ஆந்திர- தெற்கு ஒரிசா பகுதிகளை கடக்க கூடும்.
இக்கரணமாக வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர், ராணிப்பேட்டை , நீலகிரி, திருவள்ளூர் பகுதிகளில் கனமழை மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை புறநகர்ப்பகுதியில் சில இடங்களில் இன்று மேகமூட்டத்துடன் காணப்படும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29 செல்சியஸ் , குறைந்தபட்ச வெப்பநிலை 26 – 27 செல்சியஸ் ஆக இருக்கக்கூடும். நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது அதிகபட்ச வெப்பநிலை 30 – 31 செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 27 செல்சியஸ் என வானிலை மையம் கணித்துள்ளது.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…