உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் கொட்டி தீர்க்கப் போகும் கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

By Divyamayakannan on ஆவணி 13, 2025

Spread the love

தமிழகத்தில் ,  திருவள்ளூர், நீலகிரி, கோவை உட்பட  4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை , சென்னை மாநில ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:  இன்று மாலை 05.30 மணி அளவில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள வடக்கு மேற்கு வங்க கடல் பகுதிகளில், வட ஆந்திர- தெற்கு ஒரிசா கடலோரப் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதை அடுத்து 24 மணி நேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடக்கு ஆந்திர- தெற்கு ஒரிசா பகுதிகளை கடக்க கூடும்.

இக்கரணமாக வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர், ராணிப்பேட்டை , நீலகிரி, திருவள்ளூர் பகுதிகளில் கனமழை மழைக்கு வாய்ப்பு உள்ளது.

   

சென்னை புறநகர்ப்பகுதியில் சில இடங்களில் இன்று மேகமூட்டத்துடன் காணப்படும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29 செல்சியஸ் , குறைந்தபட்ச வெப்பநிலை         26 – 27 செல்சியஸ் ஆக இருக்கக்கூடும். நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது அதிகபட்ச வெப்பநிலை 30 – 31 செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 27 செல்சியஸ் என வானிலை மையம் கணித்துள்ளது.