3 லட்சம் உயிர்களை இரக்கமில்லாம கொல்லப்போறாங்க… என்னால தாங்கிக்க முடியல… கதறி அழுத நடிகை சதா…!

Spread the love

டெல்லியில் ஆறு வயது சிறுமி தெரு நாய் கடித்து உயிரிழந்ததை தொடர்ந்து உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது டெல்லியில் உள்ள 10 லட்சம் நாய்களை தனிப்படை அமைத்து பிடித்து அவற்றுக்கு கருத்தடை ஊசி செலுத்தி நாய் காப்பகத்தில் அடைக்க உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தில் இந்த முடிவை ஒருத்தரப் மக்கள் ஆதரித்தாலும் நாய் பிரியர்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படியான நிலையில் உச்ச நீதிமன்றத்தின் முடிவை கண்டித்து நடிகை சதா கண்ணீர் மல்க ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், இறந்து போன அந்த சிறுமி ரேபிஸ் நோயால் பாதிக்கப்படவில்லை என்பது நிரூபனமான பிறகும் அப்பாவி நாய்களைப் பிடித்து கொல்லப் போகிறார்கள். இத்தனை எண்ணிக்கையிலான நாய்களுக்கு அரசால் அடைக்கலம் கொடுக்க முடியாது. இன்னும் எட்டு மாதங்களில் இந்த நாய்கள் எல்லாம் மொத்தமாக கொல்லப்பட உள்ளது. இந்த நாய்களுக்கு முறையாக ஊசி போட்டு அவற்றின் இன விருத்தியை கட்டுப்படுத்தாதது முழுக்க முழுக்க அரசு மற்றும் நகராட்சியின் இயலாமை தான். இத்தனை ஆண்டுகளில் முறையாக பட்ஜெட் ஒதுக்கி இது நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இன்று இந்த நிலைமை வந்திருக்காது. விலங்கு நல ஆர்வலர்கள் பலரும் இந்த விலங்குகளை பாதுகாப்பதற்காக தங்களுடைய சொந்த பணத்தை செலவு செய்கிறார்கள்.

அவற்றுக்கு உணவளிப்பதற்கும் மருத்துவ சிகிச்சைக்காகவும் தங்கள் பணத்தை செலவு செய்கின்றனர். நானும் இதனை பல வருடமாக செய்து வருகிறேன். எந்த அரசும் எங்களுக்கு எந்த உதவியும் செய்ததில்லை. வளர்ப்பு நாய்களை வாங்கி வளர்ப்பவர்கள் இந்த அப்பாவி நாய்கள் கொல்லப்படுவதில் உங்களுக்கு பங்கு உள்ளது. ஒவ்வொரு முறை நீங்கள் ஒரு வளர்ப்பு நாயை வாங்கும்போதும் தெருவில் இருக்கும் ஒரு நாய் அல்லது பூனையின் வாழ்வாதாரத்திற்கான உரிமை பறிபோகின்றது. உங்களுடைய வீட்டில் பார்ப்பதற்கு அழகான ஒரு நாய் இருக்க வேண்டும் என்ற பேராசையால் இந்த நாய்கள் தெருவில் உள்ளன. உங்களை நீங்களே விளங்கு பிரியர்கள் என்று சொல்லிக் கொள்ளாதீர்கள். இனி உத்தரவு வெளியான பிறகு இதை எப்படி தடுக்க முடியும் என்று எனக்கு தெரியவில்லை.

இது என்னுடைய மனதை மிகவும் கலங்கடித்து விட்டது. இந்தியா போன்ற ஒரு நாட்டில் இப்படி ஒட்டுமொத்த நாய்கள் கொல்லப்பட உள்ளன. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. எங்கு போராட்டம் செய்வதென்றும் எனக்கு தெரியவில்லை. இந்த நாட்டின் மீது வெட்கப்பட வேண்டும், இப்படியான ஒரு உத்தரவை பிறப்பித்தவர்கள் வெட்கப்பட வேண்டும். நீங்கள் விலங்கு நல ஆர்வலர்களுடன் கலந்து பேசி இந்த முடிவை எடுத்து இருக்க வேண்டும் என்று சதா கண்ணீருடன் பேசி உள்ளார்.

 

Nanthini

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

8 மணத்தியாலங்கள் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

8 மணத்தியாலங்கள் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

8 மணத்தியாலங்கள் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

8 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

8 மணத்தியாலங்கள் ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

9 மணத்தியாலங்கள் ago