தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலெடுத்து சுழற்சி, தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவிவரும் நிலையில் தமிழகத்தில் சில இடங்களில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் பிடித்துள்ளது. அதேபோல தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
