கனமழை… மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம்… காவல்துறை எச்சரிக்கை அறிவிப்பு…!

By Nanthini on ஐப்பசி 22, 2025

Spread the love

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் ரெட் மற்றும் ஆரஞ்சு அலாரத்தை விடுக்கப்பட்டுள்ளது. விடிய விடிய பல மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் மெரினா கடற்கரை பகுதியில் கூடுதல் காவலரானையர் கண்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், கடல் சீற்றமாக இருப்பதையோ அல்லது ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதையோ வேடிக்கை பார்ப்பதற்காக யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பொதுமக்கள் அனாவசியமாக வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.