சென்னை முதல் கன்னியாகுமரி வரை.. தமிழகத்தின் 20 மாவட்டங்களில் கனமழை அலர்ட் – லிஸ்டில் உங்க ஊர் இருக்கா..?

By Swetha on வைகாசி 6, 2026

Spread the love

தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கிய நாள் முதலே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று இரவு 7 மணி வரை மாநிலத்தின் 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இந்த மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய வட மாவட்டங்களிலும், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி போன்ற தென் மாவட்டங்களிலும் மழைக்கு அதிக வாய்ப்புள்ளது. மேலும் கோவை, நீலகிரி போன்ற மலைப்பகுதிகள் மற்றும் திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

   

கடந்த சில நாட்களாக வாட்டி வதைத்த கத்திரி வெயிலுக்கு இடையே இந்தத் தொடர் மழை, பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஒருபுறம் நிம்மதியை அளித்துள்ளது. எனினும், கனமழை பெய்யும் நேரங்களில் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், இடி மின்னல் தாக்காமல் இருக்க மரங்களின் அடியிலோ அல்லது திறந்த வெளியிலோ நிற்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது