FLASH: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை அலர்ட்.. வருகிறது புயல் சின்னம்..!!

By Soundarya on கார்த்திகை 14, 2025

Spread the love

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இனி வரும் நாட்களில் தீவிரமடைய வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்தடுத்து மூன்று காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும்  கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வருகிற 16-ம் தேதி டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் தொடங்கும் மழையானது 17, 18 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் வங்கக் கடலில்வரும் 21 ஆம் தேதி புயல் சின்னம் உருவாகக்கூடும் என  இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. இதனிடையே,  இன்று தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரியிலும், நவ. 16-ல் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், நவ. 17-ல் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.