BREAKING: கனமழை எதிரொலி.. தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!

By Nanthini on ஆவணி 9, 2025

Spread the love

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே நள்ளிரவு முதல் தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இன்று விடுமுறை அறிவித்துள்ளார். ஏற்கனவே அரசு பள்ளிகள் விடுமுறையில் உள்ள நிலையில் தனியார் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.