வங்க கடலில் புயல் உருவாக உள்ளதால் பரவலாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டு, சென்னை, கோவை, கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், குமரி, கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சை, நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இரவு வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
