ரயிலில் இருக்கை தொடர்பாகத் தொடங்கிய சாதாரண வாக்குவாதம், பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் ஒருவர், வராத தனது கணவரின் இருக்கையில் அமர்ந்திருந்தபோது சோதனைக்கு வந்த டிக்கெட் பரிசோதகர் , கணவர் வராததால் அந்த டிக்கெட் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும், அதற்குப் புதிய டிக்கெட் எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால், அந்தப் பெண் புதிய டிக்கெட் எடுக்க மறுத்து TTE-உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த வாக்குவாதத்தின் போது TTE, “உங்களுக்கு எத்தனை கணவர்கள்?” என்று தவறான தொனியில் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கடுப்பான அந்தப் பெண், தனது கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் TTE-வை நோக்கி, “உனக்கு எத்தனை மனைவிகள், நீ எத்தனை தாய்க்கு பிறந்தவன்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளோடு கெட்ட வார்த்தைகளில் திட்டித் தீர்த்தார். TTE-வின் பேச்சால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், சக பயணிகளே அதிர்ச்சி அடையும் வகையில் மிகக் காரசாரமாகப் பதிலடி கொடுத்தார்.
சூழ்நிலை கையை மீறிச் செல்வதைக் கண்ட TTE, உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கொடுத்தார். இருப்பினும் சற்றும் பின்வாங்காத அந்தப் பெண், “யாரை வேண்டுமானாலும் கூப்பிடு, டிக்கெட் போடுபவன் வரட்டும், பார்த்துக்கொள்ளலாம்!” எனச் சவால் விட்டார். வெறும் இருக்கைப் பிரச்னையில் தொடங்கி, தனிப்பட்ட விமர்சனங்களாலும் கோபத்தாலும் RPF காவலர்கள் வரை சென்று நின்ற இந்த சம்பவம் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
