“எங்களுக்காக திருவிழாவை நிறுத்தாதீங்க”… மரண விளிம்பிலும் ஊருக்காக யோசித்த மதுரை ஜோடி… ஒரே சேலையில் ஊஞ்சலாடிய உயிர்கள்….!

By Nanthini on சித்திரை 2, 2026

Spread the love

மதுரை ஊமச்சிகுளம் பகுதியில் நிகழ்ந்த இளம் தம்பதியின் தற்கொலைச் சம்பவம், அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஊமச்சிகுளம் சாஸ்திரி தெருவைச் சேர்ந்த அருண் (28) மற்றும் செல்லூரைச் சேர்ந்த பிரியா (26) ஆகிய இருவரும் காதலித்து கரம் பிடித்தவர்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களது வாழ்வில், எதிர்பாராத சாலை விபத்து இடியாய் இறங்கியது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவரான அருணின் கால் எலும்பு முறிந்ததால், அவரால் மீண்டும் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

நிதி நெருக்கடியும், உடல்நலக் குறைபாடும் அருணைத் தீவிர மன உளைச்சலுக்கு தள்ளியது. நீண்ட நாட்களாக வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டிய சூழலால், தான் குடும்பத்திற்கு பாரமாக இருப்பதாக அவர் கருதினார். போதாக்குறைக்கு, தங்களுக்குக் குழந்தை இல்லை என்ற ஏக்கமும் அவர்களை வாட்டியது. இதனால் விரக்தியடைந்த அருண் தற்கொலை முடிவை எடுத்தபோது, “உங்களை விட்டு என்னால் வாழ முடியாது, நானும் உங்களுடனேயே வந்துவிடுகிறேன்” என மனைவி பிரியாவும் அதே விபரீத முடிவில் இணைந்துகொண்டார்.

   

கடந்த புதன்கிழமை, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தம்பதியினர் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்களது உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

   

அங்கு போலீசார் கண்டெடுத்த கடிதம் அனைவரையும் கண்கலங்க வைத்தது. அதில், “எங்கள் முடிவுக்கு யாரும் காரணமில்லை; எங்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்யுங்கள்” என்று கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும், தங்கள் மரணத்திற்காக ஊர் கோவில் திருவிழாவை நிறுத்திவிட வேண்டாம் என அவர்கள் காட்டிய அக்கறை, காண்போர் நெஞ்சை உருக்கியது. வறுமையும் உடல்நல பாதிப்பும் ஒரு அழகான காதல் வாழ்வை எப்படிச் சிதைத்துள்ளது என்பதற்கு இந்தத் துயரச் சம்பவமே சாட்சியாக அமைந்தது.