வெளிநாட்டு வேலைக்கு போனேன், 3 வருஷமா அதை பண்ண வச்சாங்க… தமிழா தமிழா நிகழ்ச்சியில் கண்ணீர் விட்ட நபர்… ஒட்டுமொத்த அரங்கத்தையும் கலங்க வைத்த தருணம்…!

By Nanthini on மார்கழி 9, 2025

Spread the love

தற்போது டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதில் மற்ற நிகழ்ச்சிகளுக்கு இருக்கும் வரவேற்பை விட விவாத நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதன்படி தற்போது கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அதற்குப் போட்டியாக மற்றொரு டிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியிலும் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு தலைப்பு கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

அதன்படி இந்த வாரம் தமிழா தமிழா நிகழ்ச்சியில் பல வருடங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளிநாட்டில் வேலை பார்த்தவர்கள் மற்றும் குடும்பத்தினர் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர் ஒருவர் தான் வெளிநாட்டு வேலைக்கு டைலராக போனேன், ஆனால் அங்கு என்னை ஆடு மேய்க்க தான் வைத்தார்கள், நான் அங்கு மூன்று வருடங்களாக அனுபவித்த வேதனைகளை இப்போது நினைத்தாலும் அழுகை வருகின்றது எனக் கூறி அரங்கத்தில் கண்ணீர் விட்ட காணொளி இணையத்தில் வெளியாகி பலரையும் கலங்க வைத்துள்ளது. மேலும் வெளிநாட்டு வேலைகள் குறித்த பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போது அது தொடர்பான புரோமோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

   

 

   

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

zeetamil பதிவைப் பகிர்ந்துள்ளார் (@zeetamizh)