பூண்டு தோலை தூக்கி குப்பையில வீசுறீங்களா..? இனி அதை செய்யவே செய்யாதீங்க… இதுல எக்கச்சக்க நன்மைகள் இருக்கு மக்களே..!!

By Soundarya on கார்த்திகை 13, 2025

Spread the love

பொதுவாக காய்கறி, வெங்காயம், பூண்டு ஆகியவற்றின் தோல்களை நாம் குப்பையில் போடுவது வழக்கம். அதன் ஆரோக்கிய பலன்கள் குறித்து நமக்கு எதுவும் பெரிதாக தெரியாது. வழக்கமாக உணவில் சேர்க்கும் பூண்டை போல தோலில் கூட ஆரோக்கிய பலன்கள் உள்ளது. சிலர் ரசம் வைக்கும் போது தோலோடு சேர்ந்து தட்டி போடுவார்கள். இப்படி தோலுடன் போடும்போது மசாலா சுவை அதிகரிக்கிறது. அதோடு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அந்த வகையில் தூக்கி போடும் பூண்டு தோலை அப்படியே உணவுடன் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் தீமைகளை பற்றி பார்க்கலாம். சளி இருமல் பிரச்சனை அதிகமாக இருப்பவர்கள் பூண்டை தோலோடு போட்டு ரசம் வைத்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இதனால் சளி, இருமல் பிரச்சனைகள் குணமாகும். பட்டைக்கு சமமான பலன்களை பூண்டு தோல் கொடுக்கும். பூண்டை போன்று அதன் தோலிலும் உணவின் சுவை அதிகமாக இருக்கும். தோலை நன்றாக காய வைத்து பொடி செய்து உப்பு சேர்த்து வைத்துக் கொள்ளலாம். இது உணவின் சுவையை அதிகரிக்கும். வெள்ளை வணிகர் தோலுடன்  உப்பு, பூண்டு, கிராம்பு ஆகிய மூன்றையும் போட்டு ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளலா.ம் இது இறைச்சியை மேரினேட் செய்ய உதவியாக இருக்கும். நன்றாக உலர வைத்த பூண்டு கொஞ்சமாக எடுத்து குளியலறை, படுக்கை அறையில் ஓரமாக தொங்க விட்டால் இது வீட்டில் உள்ள கெட்ட வாசனை இல்லாமல் புத்துணர்ச்சி கொடுக்கும்.