ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் அருகே உள்ள கேடா கிராமத்துச் அரசுப் பள்ளியில், 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது தேர்வுப் பதிவுக்கட்டணத்தைச் செலுத்த முடியாமல் தவித்துள்ளார். தந்தையின் சம்பளம் வந்தவுடன் இரண்டு நாட்களில் கட்டணத்தைச் செலுத்திவிடுவதாக அம்மாணவி கூறியுள்ளார். ஆனால், அதை ஏற்க மறுத்த அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளி முடிந்ததும் தனியாக வந்து நேரத்தைக் கழித்தால் கட்டணம் செலுத்தத் தேவையில்லை எனக் கூறி, அம்மாணவியிடம் தவறாக நடக்க முயன்று அத்துமீறியதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அம்மாணவி அழுதுகொண்டே வீட்டிற்குச் சென்று நடந்தவற்றைத் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆத்திரமடைந்த குடும்பத்தினரும் ஊர்மக்களும் உடனடியாகப் பள்ளிக்குத் திரண்டு வந்து அந்தத் தலைமை ஆசிரியருக்குத் தர்மஅடி கொடுத்தனர். தொடர்ந்து மாணவியின் தோழி கொண்டு வந்த கருப்பு மையைக் கொண்டு, அழுதுகொண்டே அந்தத் தலைமை ஆசிரியரின் முகத்தில் மாணவி பூசினார். பின்னர் அவரைப் பள்ளி வளாகத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்று காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
