மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில், அதிவேகமாக வந்த பிக்-அப் மோதிப் பயங்கர விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் வாகனம் பலத்த சேதமடைந்த நிலையில், 8 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றியிருந்த கேமராவில் பதிவான இக்கொடூர விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், விபத்துக்கான சரியான காரணம் என்ன என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
