BREAKING: தேர்தலில் இவர்தான் முதலிடம்…. வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வெளியான அதிரடி ரிப்போர்ட்…!

By Nanthini on சித்திரை 23, 2026

Spread the love

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் களத்தில் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு அதிக இடங்களில் பிரசாரம் செய்த தலைவர்களின் பட்டியலில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 178 இடங்களில் உரையாற்றி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 123 இடங்களிலும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் 80 இடங்களிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். முதல்முறையாகத் தேர்தல் களத்தைக் காணும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் 14 இடங்களில் பிரசாரம் மேற்கொண்டுள்ள நிலையில், தலைவர்களின் இந்தத் தீவிர பரப்புரை வாக்காளர்களிடையே எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது இன்று பதிவாகும் வாக்குகள் மூலம் தெரியவரும்.