மெக்சிகோவில் 71 வயதான மூதாட்டி டோனா மரியாவைக் கொலை செய்ததாக கார்லோஸ் எஸ்கமில்லா என்பவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவருக்குக் கொத்தனார் வேலை வழங்கிய மூதாட்டியின் வீட்டில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. வேலை கொடுத்து நம்பிய ஒருவரே இத்தகைய குற்றத்தில் ஈடுபட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலைக்குப் பிறகு, கார்லோஸ் எஸ்கமில்லா வீட்டிலிருந்து வெளியேறிய விதமும் கவனம் பெற்றுள்ளது. மூதாட்டியைத் தாக்கி, அவரது கைகளைக் கட்டிப்போட்டதாகக் கூறப்படும் அவர், பின்னர் வீட்டின் நுழைவாயிலைத் திறந்து மூதாட்டியின் காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
