மலைக்க வைக்கும் தூத்துக்குடி அண்ணாச்சி… டெக்னாலஜி உலகின் அரசன் ஷிவ் நாடார் வெற்றிச் சரித்திரம்

Spread the love

வெறும் எலக்ட்ரானிக் கால்குலேட்டர் விற்பனை செய்யும் நிறுவனத்தில் ஆரம்பித்து என்று உலகின் புகழ்பெற்ற  IT நிறுவனமான HCL-ன் தந்தையாக விளங்குபவர் ஷிவ் நாடார். தமிழகத்தின் கடைக்கோடி கடற்கரை நகரமாம் தூத்துக்குடி, திருச்செந்தூர் அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் சிவசுப்ரமணிய நாடார் என்பவருக்கு மகனாகப் பிறந்தார் ஷிவ் நாடார். இவரது தாய் தினத்தந்தி நிறுவனர் ஆதித்தனாரின் தங்கை ஆவார்.

#image_title

பள்ளிப் படிப்பை கும்பகோணத்திலும், பொறியியல் படிப்பை கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியிலும் முடித்த ஷிவ் நாடார் புனேவில் உள்ள வால்கூப்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தில் மிகச் சாதாரண பொறியாளராக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். அவருக்குள் இருந்த முதலாளி ஆசை துளிர்விட தன் நண்பர்களுடன் இணைந்து மைக்ரோகார்ப் என்ற கால்குலேட்டர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை ஆரம்பித்தார்.

#image_title

அதன்பின் 1976-ல் அவர் எடுத்த முடிவுதான் இன்று IT உலகையே ஆட்டுவிக்கிறது. ஆம். தன்னிடம் இருந்த 1.87 லட்சம் பணத்தைக் கொண்டு HCL நிறுவனத்தை ஆரம்பித்தார். ஐடி துறையில் இவரது நிறுவனம் ஆரம்பம் முதலே ஒரு முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. ஊழியர்கள் நலனில் இவர் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் ஷிவ் நாடார் தன் நிறுவனத்தில் சிறப்பாகப் பணியாற்றும் ஊழியர்களுக்கு கார் பரிசளிப்பது, ஊதியத்துடன் கூடிய சுற்றுலா விடுமுறை வழங்குவது போன்ற சலுகைகளை அளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

கல்லடி பட்டும் கண்ணதாசனுக்கு குசும்ப பார்த்தீங்களா..? வழிந்த ரத்தத்திலும் ததும்பிய காதல் கானம்..

அதனால்தான் HCL நிறுவனத்தில் பணியாற்ற பலரும் போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பம் செய்கின்றனர். இதுமட்டுமின்றி தன் நிறுவனத்தின் பெரும் பங்கினை நன்கொடையாக வழங்குவதில் ரத்தன் டாடாவைப் போல் ஷிவ் நாடாரும் சிறந்து விளங்குகிறார். அதிலும் குறிப்பாக கல்விச் சேவையில் இவர் ஆற்றும் பங்கு அதிகம். சென்னையில் இன்று பிரபலமாக விளங்கும் SSN பொறியியல் கல்லூரி இவரது தந்தை சிவசுப்பிரமணிய நாடார் நினைவாக இது தொடங்கப்பட்டது.

#image_title

மேலும் இவரது ஷிவ் நாடார் அறக்கட்டளை பல்வேறு உதவிகளை முடியாதவர்களுக்கும், கல்வி பயில்வோருக்கும் வழங்கி வருகிறது. இந்திய அரசு IT துறையில் இவர் செய்த சாதனைகளுக்காக பத்மபூஷன் விருது வழங்கிச் சிறப்பித்தது. மேலும் பல விருதுகளைப் பெற்ற ஷிவ் நாடார் இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முன்னணியில் உள்ளார்.

admin

Recent Posts

“பேசாம இந்தியாவுக்கே போயிட்டு வரலாம்…” ஒரு பல்லை பிடுங்குவதற்கு இத்தனை லட்சமா…? அமெரிக்க மருத்துவமனையின் கட்டணத்தை பார்த்துத் தலைசுற்றிப்போன NRI…!!

அமெரிக்காவில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வரும் நிதின் மல்ஹோத்ரா என்ற இந்தியர், அங்குள்ள மருத்துவக் கட்டணங்களின் கொடூர நிதர்சனத்தைச்…

9 minutes ago

“இன்ஸ்டா ஸ்டிக்கரால் கிடைத்த லேப்டாப்…” நெட்டிசன்களின் இதயங்களை வென்ற ஆட்டோ ஓட்டுநரின் செயல்…! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நெகிழ்ச்சி சம்பவம்…!!

இரவு நேரத்தில் பெய்த கனமழைக்கு நடுவே, வாலிபர் ஒருவர் தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பைக்கின் பின்னால் அமைக்கப்பட்டிருந்த…

29 minutes ago

அய்யய்யோ… டெரஸில் கிரில் வைக்கக் கூடாதுனு… இவ்வளவு பெரிய அக்கிரமமா?… பெண்ணை அடித்துத் துவைக்கும் பகீர் வீடியோ… நலசோபராவில் கொதித்தெழுந்த மக்கள்…!

நலசோபரா கிழக்கு பகுதியிலுள்ள ஒய்.பி. நகர் டெரஸில் கிரில் அமைப்பது தொடர்பாக இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர்…

34 minutes ago

ஐயோ… நீதி கேட்கக் கூடாதா சார்?… முதல்வர் வருகையின்போது கதறி அழுத… கொல்லப்பட்ட சிறுவனின் பெற்றோர் மீது… பெண் காவலர் நடத்திய அதிர்ச்சித் தாக்குதல்… உ . பி – யில் பரபரப்பு…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மாவட்டத்தில் முதலமைச்சர் யோகி ஆதிநாத்தின் வருகையின்போது, 9 மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட 10 வயது…

37 minutes ago

அடே… என் மச்சான் யாருன்னு உனக்குத் தெரியுமா?… சமூக வலைதள வீரரை அடித்து துவம்சம் செய்த அதிரடி மோதல்… இணையத்தில் வீடியோ வைரல்…!

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு குடும்பத் தகராறு இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட மோதலில், மனைவி…

49 minutes ago

அய்யய்யோ… நாய் குறுக்கே வருது… காப்பாற்ற முயன்ற அதிவேகக் கார் மின்கம்பத்தில்… மோதி பயங்கர விபத்து… 4 பேர் படுகாயம்… திக் திக் நிமிடங்கள்…!

உத்திரப்பிரதேசம் மாநிலம், புலந்த்ஷெர் மாவட்டம் ஜஹாங்கிராபாத் பகுதியில் நாயைக் காப்பாற்ற முயன்றபோது அதிவேகமாக வந்த கார் மின் கம்பத்தின் மீது…

55 minutes ago