ஐதராபாத்தில் ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த கொடூரமான கொலைச் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை, 17 வயது சிறுமி தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்து, உடலை வீட்டிற்குள்ளேயே புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தின் ஜவஹர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சு (40). வீட்டு வேலை செய்து வந்த இவருக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். அந்தச் சிறுமிக்கும் 22 வயதான அஜய் என்பவருக்கும் இடையே காதல் இருந்து வந்துள்ளது. அஜய் மீது ஏற்கனவே அந்தச் சிறுமி தொடர்பாக போக்சோ (POCSO) சட்டத்தில் வழக்குகள் இருந்த நிலையில், இவர்களின் காதலுக்கு தாய் அஞ்சு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காதலர்கள் இருவரும் அஞ்சுவை தீர்த்துக் கட்டத் திட்டமிட்டனர். கடந்த ஆண்டு மே மாதம், அஞ்சு வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது, மறைந்திருந்த அஜய் அவரை கத்தியால் குத்த, சிறுமி தனது தாயின் கைகளைப் பிடித்துக் கொண்டுள்ளார். இதில் அஞ்சு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொலை செய்த பிறகு உடலை மறைக்க இருவரும் சினிமா பாணியில் திட்டமிட்டுள்ளனர். முதலில் உடலை ஒரு போர்வையில் சுற்றி கட்டிலுக்கு அடியில் வைத்துள்ளனர். பின்னர், வீட்டிற்குள்ளேயே ஒரு குழியைத் தோண்டி உடலைப் புதைத்து, அதன் மேல் சிமெண்ட் மற்றும் மணல் கொண்டு பூசியுள்ளனர். வீட்டில் மராமத்து வேலை நடப்பதாகக் கூறி உறவினர்களை நம்ப வைத்துள்ளனர். மேலும், அஞ்சுவின் செல்போனை உடைத்து அழித்துவிட்டு, அவர் யாரிடமோ ஓடிவிட்டதாக நாடகமாடியுள்ளனர். அதன் பிறகு இருவரும் அதே வீட்டிலேயே வசித்து வந்துள்ளனர். இவர்களுக்குள் திருமணம் முடிந்து தற்போது ஒரு குழந்தையும் உள்ளது.
அஞ்சுவின் மூத்த மகள் தனது தாயைக் காணவில்லை என்று கடந்த அக்டோபர் 2025-ல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது, சிறுமி மற்றும் அவரது காதலன் மீது சந்தேகம் எழுந்தது. போலீசார் அவர்களைத் தங்களது பாணியில் விசாரித்தபோது, இருவரும் உண்மையை ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. தற்போது இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். ஒரு வருடமாக சடலத்துடன் அதே வீட்டில் வாழ்ந்து வந்த மகளின் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…