கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில், 28 வயதான ஷைலா என்ற இளம்பெண் தனது கணவர் அக்ஷய் ஜாதவ் என்பவரால் பட்டப்பகலில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தம்பதியினர் இருவரும் கோவிலுக்குச் சென்றுவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, திடீரென காரை நிறுத்திய அக்ஷய், ஷைலாவை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்துப் போட்டுள்ளார். பின்னர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
https://x.com/Rajmajiofficial/status/2037160390900293797?s=20
இந்தக் கொடூரத் தாக்குதலின் உச்சகட்டமாக, படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த ஷைலாவின் உடல் மீது அக்ஷய் காரை ஏற்றிச் சென்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அங்கிருந்த பொதுமக்களின் கண் முன்னாலேயே நிகழ்ந்துள்ளது. அங்கிருந்தவர்கள் பலரும் இக்கொடூரத்தை தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்தார்களே தவிர, யாரும் அதனைத் தடுக்க முன்வரவில்லை என்பது வேதனையான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கொலையாளி அக்ஷய் ஜாதவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். முதற்கட்ட விசாரணையில் குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. தற்போது அக்ஷய் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் திட்டமிட்ட கொலைக் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் நீரிணையைத் திறந்து வைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிக்குச் சீனா தனது…
தேர்தல் ஆணையம் (ECI) வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தபால் வாக்கு செலுத்தும் நடைமுறையில் மிக முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. முன்னதாக, தேர்தல்…
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி (LIC), தனது பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க இயக்குநர்…
பீகார் அரசியலில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த குடும்பப் பூசலுக்கு மத்தியில், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் தனது சித்தப்பா…
சேலத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தமிழக அரசியலில் ஒரு புதிய திசையை…
ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் அமெரிக்காவுக்கு விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை, ஏற்கனவே போர்ப் பதற்றத்தில் இருக்கும் மேற்காசியப் பிராந்தியத்தில் பெரும்…