திருச்சூர் மாவட்டம் மாளா அருகே உள்ள சினேகபுரியைச் சேர்ந்த 30 வயது டிரைவர் ஸ்ரீஜித்துக்கும், அவரது மனைவி அஞ்சனாவின் தோழியான 24 வயது மில்னாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பேக்கரி உரிமையாளர் பாபுவின் மகளான மில்னா, தோழி அஞ்சனாவின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தபோது ஸ்ரீஜித்துடன் காதல் வயப்பட்டுள்ளார். இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் அஞ்சனாவுக்குத் தெரியவரவே, அவர் இருவரையும் கண்டித்து கடும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
தங்கள் உறவை அஞ்சனா எதிர்த்ததால் ஆத்திரமடைந்த ஸ்ரீஜித், கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியைத் தாக்கியுள்ளார். கணவரின் நடத்தை மற்றும் தோழியின் துரோகத்தால் மனமுடைந்த அஞ்சனா, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர், தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சூழலிலும் மில்னாவுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்ட போதிலும், அவர் ஸ்ரீஜித்துடனான தொடர்பைக் கைவிட மறுத்து வந்துள்ளார்.
கடந்த 24-ம் தேதி பேக்கரிக்குச் சென்ற மில்னா வீடு திரும்பாததால், அவரது தந்தை பாபு போலீசில் புகார் அளித்தார். மில்னாவின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, அவர் ஸ்ரீஜித்தின் வீட்டில் இருப்பது உறுதியானது. போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது வீடு உள்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார், ஸ்ரீஜித் மற்றும் மில்னா ஆகிய இருவரும் தூக்கில் பிணமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அவர்கள் தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், தங்கள் காதலைக் கண்டித்த அஞ்சனா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தங்களை மனதளவில் பாதித்ததாகவும், அதனால் இனி வாழப் பிடிக்காமல் ஒன்றாக உயிரை விடுவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்கொலை முயற்சி மற்றும் இரட்டை மரணம் என அடுத்தடுத்து நடந்த இந்தத் துயரச் சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கொலைச் சம்பவங்களுக்கு தவெக அரசு பொறுப்பாகாது என்று…
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் BA295 என்ற போயிங் 777 ரக விமானம், அக்டோபர் 5, 2026 அன்று லண்டன் ஹீத்ரோ…
சென்னை உயர் நீதிமன்றத்தில், பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜயின் வெற்றியை எதிர்த்து வாக்காளர் தினேஷ் என்பவர் தாக்கல் செய்த வழக்கு…
குஜராத் மாநிலம் வாபி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் கணவரை விட்டுப் பிரிந்து சொடிலா பகுதியில் ஒரு நபருடன்…
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை அமைத்தது. இந்நிலையில், காலியாக…
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று…