‘கயல்’ சீரியல் நடிகர் அவிநாஷின் மனைவியை பார்த்திருக்கீங்களா?… என்னது அவருக்கு திருமணம் ஆயிடுச்சா?… வைரலாகும் புகைப்படங்கள் இதோ!….

‘கயல்’ சீரியல் நடிகர் அவிநாஷின் மனைவியை பார்த்திருக்கீங்களா?… என்னது அவருக்கு திருமணம் ஆயிடுச்சா?… வைரலாகும் புகைப்படங்கள் இதோ!….

கயல் சீரியல் நடிகர் அவினாஷ் தன் மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்  தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சீரியல் நடிகரான அவினாஷ் கேரளாவை சேர்ந்தவர். இவருடைய நான்கு வயதில் குடும்பத்துடன் சென்னைக்கு வந்து விட்டார். தற்பொழுது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் அன்பு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் ஒரு நடிகர் மட்டுமல்ல ஸ்போர்ட்ஸ் பிளேயர் கூட. நேஷனல் லெவலில் பல பதக்கங்களை வாங்கி குவித்துள்ளார்.

ஆனால் நடிப்பை விட, விளையாட்டை விட, இவருக்கு டான்ஸ் மீது தான் அதிக காதலாம். இதை தொடர்ந்தவர் தற்பொழுது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். இந்நிகழ்ச்சியில் அவர் தன்னுடைய இரண்டு கால்களை உடைத்துக் கொண்டார்.

இருந்தாலும் கடைசி வரை டான்ஸ் ஆடி டைட்டிலை ஜெயித்துள்ளார் அவினாஷ். இவர் நான்காம் வகுப்பு படிக்கும் பொழுது சன் டிவியில் ஒளிபரப்பான தில்லானா தில்லானா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டாராம். இவருடைய தங்கையும் கூட ஒரு சின்னத்திரை நடிகை தான். அவர் வேறு யாரும் இல்லை. காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து வரும் நடிகை அக்ஷயா தான்.

தற்பொழுது  இவரது காதல் மனைவியை பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. நடிகர் அவினாஷ் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது இவருடைய மனைவியை சந்தித்துள்ளார். ஆனால் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது தான் இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டதாம். இதைத் தொடர்ந்து அவினாஷ் வீட்டில் காதலுக்கு சம்மதம் தெரிவித்து விட்டார்களாம்.

ஆனால் அவருடைய மனைவியின் வீட்டில் சம்மதம் தெரிவிக்காமல் வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார்களாம். இதை தொடர்ந்தவர் அங்கே சென்றும் பல போராட்டங்களை நடத்தி, தற்போது அவர் மனைவியின் பெற்றோர் இடத்தில் சம்மதத்தை வாங்கி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தற்போது இவர் தன் மனைவியுடன் இணைந்து பல ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகர் அவினாஷ் தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Begam