40 வருடம் கழித்து நடிகை வனிதாவிற்கு தெரிய வந்த உண்மை!… இந்த பிரபல நடிகை நடிகை வனிதாவின் உறவினரா?!….

40 வருடம் கழித்து நடிகை வனிதாவிற்கு தெரிய வந்த உண்மை!… இந்த பிரபல நடிகை நடிகை வனிதாவின் உறவினரா?!….

தமிழ் சினிமாவில் 1995 இல் வெளியான ‘சந்திரலேகா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை வனிதா விஜயகுமார். பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள் ஆவார். இவர்  தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக விளங்குகின்றார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

இவர்  பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக அதிக அளவில் பேசப்பட்டவர். அந்த ஷோவில் நடந்த பல பிரச்சனைகளுக்கு வனிதாவின் பேச்சு தான் காரணம் என குற்றச்சாட்டு இருந்தாலும், அந்த சீசன் அதிக டிஆர்பி பெறுவதற்கு அவர் முக்கியமாக காரணமாக இருந்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இவர் தற்பொழுது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். தன் குடும்பத்தையும் சொந்த காலில் நின்று பார்த்துக் கொள்கிறார். தன் மொத்த குடும்பத்தை விட்டும் நடிகை வனிதா விலகியே உள்ளார். நடிகை வனிதா அவ்வப்பொழுது  தனது அம்மாவை பற்றி சமூக வலைத்தளங்களில் கூறி வருகிறார்.

இந்நிலையில் பிரபல நடிகை விமலா ராமன் அம்மா வழியில் உறவினர் என்பது தற்பொழுது நடிகை வனிதாவிற்கு 40 வருடங்கள் கழித்து தெரியவந்துள்ளது. இதை அவரே புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார். மேலும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது,

‘பிரிட்டிஷ்காரர்களால் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட முதல் நீதிபதி சர் சிடி முத்துசாமி ஐயரின் கொள்ளுப் பேத்தி தான் விமலா ராமன். அவரது சிலை நீதிமன்ற வளாகத்தில் தற்போதும் இருக்கிறது’ என வனிதா கூறியுள்ளார். தற்பொழுது இந்த பதிவு வைரலாகி வருகிறது.

இதோ அந்த பதிவு….

Begam