BREAKING: CM விஜய் இழந்தார்… ஒரே சம்பவத்தால் ஆடிப்போன தவெக அரசு… பெரும் பரபரப்பு….!

By Nanthini on ஆனி 15, 2026

Spread the love

தமிழ்நாட்டில் அண்மையில் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பைச் சரியாகக் கையாளவில்லை என எதிர்க்கட்சிகள் தங்களது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக, கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது சிறுமி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவத்தை சுட்டிக்காட்டி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியில் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக பாஜ மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.

இத்தகைய தொடர் குற்றச்சம்பவங்கள் மற்றும் குற்றப்பின்னணி கொண்டவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக எழும் புகார்கள், தவெக அரசு மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை நாளுக்கு நாள் இழந்து வருவதைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்; மேலும், புதிய அரசு நிர்வாக ரீதியாக இன்னும் முதிர்ச்சியடைய வேண்டியுள்ளது என்பதையே இப்போதைய சூழல் உணர்த்துவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.