தளபதி விஜய் அவர்கள் தலைவர் விஜயாக மாற இருக்கிறார். அதனால் அவரின் கடைசி படமான விஜய் 69 படத்திற்கு முந்தின படமான வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகும் “கோட்” படத்திற்கு மிக மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதற்காக படத்தை மிகச் சிறப்பாக இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. இப்படத்திற்கு மேலும் வலுவையூட்ட இசை புயலை திணிக்கிறார் “யுவன் சங்கர் ராஜா”. யுவன் சங்கர் ராஜாவின் இசை என்றாலே அது மிகப்பிரமாண்டமாக தான் இருக்கும்,
அதில் விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் அதிருபூதி ஆகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் மற்றும் பலர், மீனாட்சி சவுத்ரி, மைக் மோகன், அஜ்மல், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா போன்ற பலபலங்கள் இப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து வெளியிட உள்ளது.
தற்போது படத்தின் பைனல் சூட் எப்பொழுது என்று வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் கடைசி படப்பிடிப்பு மார்ச் கடைசி அல்லது ஏப்ரல் முதல் வாரம் முடியை வடைந்து விடும் என்று தெரிவித்து இருக்கிறார்கள். இப்படத்தில் இன்னும் 35 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு உள்ளதாக வெங்கட் பிரபு தெரிவித்து இருக்கிறார். படப்பிடிப்பின் கடைசி பைனல் டச் எங்கே எடுக்கிறார்கள் என்று தெரியுமா?
ரஷ்யாவில் இதற்காகவே ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அந்த இடத்தில் தற்போது விஜயின் கடைசி கிளைமாக்ஸ் சீக்வன்சை பக்காவாக பிளான் செய்து இயக்கி வருகிறார்கள். இன்னும் சில வாரங்களில் ரஷ்யாவில் கடைசி படப்பிடிப்பு முடிந்து விடும், அதன் பின் படத்தின் பின்னணி வேலைகள் மட்டும் பாக்கியுள்ளது அதற்கு பிறகு திரை வருவதே மட்டும் வேலையாகும்.