தமிழ் சினிமாவில் உலகத் தரம் வாய்ந்த ஸ்டூடியோ வைத்துள்ள இசை அமைப்பாளர் என்றால் அது ஹாரிஸ் ஜெயராஜ் என்றுதான் சொல்ல வேண்டும். அவருடைய இசை மற்ற இசை அமைப்பாளர்களை விட வித்தியாசமாக இருப்பது மட்டுமல்லாமல் தனித்துவமாக இருப்பதால் என்னவோ அவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அவரை ரசிகர்கள் அனைவரும் ஹாரிஸ் மாம்ஸ் என அழைக்கிறார்கள். கடந்த 2001 ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குனராக அறிமுகமான மின்னலே திரைப்படம் மூலமாகத்தான் ஆரிஸ் ஜெயராஜ் இசை அமைப்பாளராக அறிமுகமானார்.
அந்த காலகட்டத்தில் ஏற்கனவே ஏ ஆர் ரகுமான், தேவா மற்றும் யுவன் சங்கர் ராஜா என பலரும் ஜாம்பவான்களாக உயர்ந்து நின்று கொண்டிருக்கும் போது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன்னுடைய இசையால் ஹாரிஸ் ஜெயராஜ் திரும்பி பார்க்க வைத்தார். அந்தத் திரைப்படம் தான் இவருடைய முதல் படம் என யாராவது கூறினால் பலரும் அதனை ஏற்க மாட்டார்கள். ஏனென்றால் தன்னுடைய முதல் படத்திலேயே இசையில் ரசிகர்களை வசியப்படுத்தும் அளவுக்கு இசையமைத்திருந்தார். அதன் பிறகு பல இயக்குனர்களுடன் ஹாரிஸ் ஜெயராஜ் இணைந்து பணியாற்றியுள்ளார். தற்போது முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ஹாரிஸ் ஜெயராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில், விக்ரமின் இருமுகன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டின் போது நான் ஜெர்மனிக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போ திடீர்னு போன் பண்ணி விக்ரம் பிறந்தநாள் வருகிறது ட்ரெய்லர் ரிலீஸ் பண்ண போறோம் பாட்டு கம்போஸ் பண்ணி கொடுங்க என்று சொல்லிட்டாங்க. எனக்கு அப்போ என்ன பண்றதுனே தெரியல. நைட்டு பிளைட் ஏறுறதுக்குள்ள சின்னதா ஒரு கீபோர்டு கம்ப்யூட்டர் எல்லாத்தையும் வாங்கிட்டேன்.
பக்கத்துல இருக்க யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காத மாதிரி எல்லாத்தையும் சின்ன சின்னதா வாங்கி வைத்திருந்தேன். ஹெலனா பாட்டு ஃப்ளைட்ல வரவர தான் கம்போஸ் பண்ண. அதுவும் பைட் சீனுக்கு மியூசிக் போட சொல்லிட்டாங்க. அப்போ பிளைட்ல இருக்க பணி பெண்கள் எல்லோரும் போகும்போது வரும்போது என்ன பாத்துட்டே இருந்தாங்க. எப்படியோ ஒரு வழியா பிளைட் ரீச் ஆவதற்கு முன்னாடி பாட்டு கம்போஸ் பண்ணி முடிச்சிட்டேன் என்று இருமுகன் படத்திற்கு பாட்டு கம்போஸ் பண்ண சுவாரஸ்யமான சம்பவத்தை ஹாரிஸ் ஜெயராஜ் பகிர்ந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…
சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…
திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…
உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…