#image_title
இந்தி சினிமா பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களை தமிழ் பாடல்கள் பக்கம் திருப்பியவர் இளையராஜா என்றால், இந்தி ரசிகர்களையும் தமிழ் சினிமா பாடல்களைக் கேட்க வைத்தவர் ஏ ஆர் ரஹ்மான் என்று சொல்வார்கள். 1992 ஆம் ஆண்டு அறிமுகமான ரஹ்மான் அதன் பின்னர் 10 ஆண்டுகள் இந்திய சினிமாவையே ஆண்டுகொண்டிருந்தார்.
அப்போதுதான் அவருக்கு ஒரு போட்டியாளராக தமிழ் சினிமாவில் இருந்து வந்தார் ஹாரிஸ் ஜெயராஜ். 2001 ஆம் ஆண்டு மின்னலே திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜ் தொடர்ந்து 9 ஆண்டுகளாக பிலிம்பேர் விருதை வாங்கிவந்த ஏ ஆர் ரஹ்மானிடம் இருந்து அதை தட்டிப்பறித்தார்.
அதன் பின்னர் அடுத்த 10 ஆண்டுகள் அவர் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு தமிழ் சினிமாவில் ரஹ்மானுக்கு இணையான ரசிகர் கூட்டத்தைக் கொண்ட இசையமைப்பாளராக வளர்ந்தார். அவர் பாடல்கள் சர்ச் பாடல்களின் ட்யூன்களை காப்பியடித்தது போல இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
harris jayaraj
ஆனாலும் அவர் பாடல்கள் தொடர்ந்து சூப்பர்ஹிட்டாகி கலக்கின. இடையில் அனிருத்தின் வருகைக்குப் பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் தன்னுடைய மார்க்கெட்டை இழந்தார். இடையில் லெஜண்ட் போன்ற பாடல்களுக்கு இசையமைத்தாலும் அவரால் தன்னுடைய பழைய ஃபார்முக்கு திரும்ப முடியவில்லை. இப்போது அவர் ஜெயம் ரவி நடிக்கும் பிரதர் படத்துக்கு இசையமைத்துள்ளார். அந்த படத்தில் இடம்பெற்றுள்ள மகாமிஷி என்ற பாடல் வைரல் ஹிட்டாகியுள்ளது.
இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஹாரிஸ் ஜெயராஜ் “நான் 2001 ஆம் ஆண்டு வெளியான மின்னலே படத்தின் மூலமாக இசையமைப்பாளர் ஆகவில்லை. அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே மோகன் ராஜா இயக்கிய ஒரு குறும்படத்துக்குதான். அந்த படத்துக்குதான் என் பெயர் முதல் முறையாக இசையமைப்பாளர் என்று வந்தது” எனப் பேசியுள்ளார்.
அமைச்சரவையில் இருந்து அமைச்சர் சரத்குமார் விரைவில் நீக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. சமீபத்தில்…
சமூக வலைதளங்களில் லைக், ஷேர் மற்றும் ஃபாலோயர்ஸ்களைப் பெறுவதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதமான லட்டு பிரசாதத்தைப் பயன்படுத்துவதாக எழுந்த…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பள்ளிவிடையில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த…
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ராமபையனூர் அரசு நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டச் சாம்பாரில், அதே ஊரைச் சேர்ந்த…
தேசிய அரசியலில் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் வெளியான முன்னணி கருத்துக்கணிப்பு…
சென்னை கூடுவாஞ்சேரியில் அரங்கேறியுள்ள கொடூரக் கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாதுன் நிஷா (38) என்ற…