பிரபல ஹரிஷ் கல்யாண் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ரிலீசான லப்பர் பந்து திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மக்களுடைய நல்ல வரவேற்பை பெற்றது. முன்னதாக ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் அசோக் செல்வன் கதாபாத்திரத்தில் முதலில் நடிப்பதற்கு ஹரிஷ் கல்யாணிடம் பேசி உள்ளனர். அவர் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார்.
சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் அளித்த பேட்டியில் கூறியதாவது, லப்பர் பந்து படம் பண்றதுக்கு முன்னாடியே இதுவும் ப்ளூ ஸ்டார் படமும் வேறமாதிரின்னு எனக்கு தெரியும். ஏன்னா நான் ப்ளூ ஸ்டார் படத்தோட ஸ்கிரிப்ட் படிச்சு இருக்கேன். நான் பிரின்ஸ் பிக்சர்ஸ் லப்பர் பந்து படம் சைன் பண்ணதுக்கு அப்புறம் தான் எனக்கு ப்ளூ ஸ்டார் படத்தோட ப்ராஜெக்ட் வந்துச்சு. நான் என்ன படம்னு முதல்ல கேட்கல.
நீலம் புரொடக்ஷன் இருந்து ஒரு கதை சொல்றேன்னு சொன்னாங்க. அது ரஞ்சித் சாரோட ப்ரொடக்ஷன். ஓகேன்னு சொல்லிட்டு கதை கேட்டேன். ஒன்லைன் ஸ்டோரி சொன்னப்பா கூட நான் லப்பர் வந்து படத்த பண்றேன்னு சொல்லல. ஏன்னா அதனாலதான் நான் வேண்டான்னு சொல்றேன்னு அவங்க நினைச்சுக்க கூடாது. அப்படிங்கிறதுக்காக சொல்லல. உடனே முழு ஸ்கிரிப்ட் வாங்கி படிச்சேன். எல்லா கதை எல்லா கேரக்டரும் எனக்கு தெரிஞ்சது. எல்லாமே நல்லா இருந்துச்சு.
அதுக்கு அப்புறம் தான் ஏற்கனவே நான் இந்த மாதிரி ஒரு படத்தை சைன் பண்ணிட்டு மறுபடியும் அதே மாதிரி படம் பண்ணா அது செட் ஆகாது. அதுக்கப்புறம் தான் நான் ஏற்கனவே லப்பர் வந்து படத்துல சைன் பண்ணத சொன்னேன். ஏன்னா உடனே வேண்டாம்னு சொன்னா அவரு தப்பா எடுத்து பாருன்னு நான் லேட்டா தான் சொன்னேன். ஃபர்ஸ்ட் நான் சைன் பண்ணது கிரிக்கெட். அடுத்தது நான் ஒரு கிரிக்கெட் சப்ஜெக்ட்ல சைன் பண்ணா இரண்டு படத்துல ஏதாவது ஒரு படத்தை அது கண்டிப்பா பாதிக்கும் என ஓபன் ஆக பேசி உள்ளார்.