விஷம் கலந்த ஜூஸை குடிக்க போகும் கயல்.. கடைசி நேரத்தில் தடுத்த ராஜலக்ஷ்மி.. பரபரப்பான திருப்பங்களுடன் கயல் சீரியலில் இன்று..!!

By Priya Ram on அக்டோபர் 2, 2024

Spread the love

சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலை பார்க்க ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். டிஆர்பி ரேட்டிங்கில் கயல் சீரியல் தான் முதல் இடத்தில் உள்ளது. தனியாக நின்று கயல் தனது அண்ணன் தங்கை தம்பியின் நலனுக்காக எவ்வாறு போராடுகிறார் என்பதை வைத்து கதை நகர்ந்தது. பல போராட்டங்களுக்குப் பிறகு கயல் எழில் திருமணம் எப்போது நடைபெறும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

   

கயலின் ரிசப்ஷன் கோலாகலமாக நடந்தது. அப்போது மேடை ஏறி ராஜேஸ்வரி கயலுக்கு வைர நெக்லஸை கொடுத்து பேசினார். கயல் போன்ற பெண் கிடைப்பதற்கு எழில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் அவளை புரிந்து கொள்ளாமல் நான் சில விஷயங்களை செய்தேன். ஆனால் அவள் நான் தவறு செய்த இடத்தில் அதை தவறு என்று சுட்டிக் காட்டியதோடு மட்டுமில்லாமல் முடிந்தவரை எனக்கு சூழ்நிலையை புரிய வைக்க நிறைய போராட்டங்களை சந்தித்தால் ஒரு கட்டத்தில் கயிலின் நல்ல உள்ளம் புரிந்து விட்டது.

   

 

கோடீஸ்வரி ராஜேஸ்வரி என்ன சொல்வதை விட கயிலின் அத்தை என்று சொல்வதையே பெருமையாக நினைக்கிறேன் என பேசி இருந்தார். இன்றைய எபிசோடு ப்ரோமோ வெளியானது. விஷம் கலந்த ஜூசை கயல் குடிக்க போகிறார். அப்போது மேடை ஏறிய ராஜேஸ்வரி கயலிடம் அந்த ஜூசை குடிக்காதே அதில் விஷம் கலந்திருக்கிறது. அதில் விஷம் கலந்தது யார் என்பது எனக்கு தெரியும். அது தீபிகா தான் என கூறுகிறார்.

அனைவரும் தீபிகாவை நிற்க வைத்து கேள்வி கேட்கின்றனர். உண்மையாகவே திருமண மேனேஜ்மென்டை கவனிக்க வந்தாயா? அல்லது வேறு ஏதேனும் திட்டம் இருக்கிறதா என தீபிகாவிடம் கேட்கின்றனர். கோபத்தில் ராஜேஸ்வரி தீபிகாவை அடிக்கிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றனர். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை எபிசோடில் பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
Priya Ram