தனது இளம் பருவத்தில் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களைப் பற்றி ஹர்திக் பாண்டியா மனம் திறந்து பேசியுள்ளார். தான் சிறுவனாக இருந்தபோது, சாலையோர உணவகங்களுக்குத் தனது தாயார் இல்லாமல் தனியாகச் செல்ல அஞ்சியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தான் கருப்பாக இருந்ததாலும், பார்ப்பதற்கு ஒரு குழந்தை தொழிலாளியைப் போல இருந்ததாலும், உணவகங்களுக்குச் செல்லும் போதெல்லாம் அங்கிருந்தவர்கள் தன்னை ஒரு ‘வெயிட்டர்’ என்று தவறாகக் கருதியதாக அவர் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.
மேலும் நிறத்தின் அடிப்படையில் ஒரு மனிதனின் மதிப்பீடு தீர்மானிக்கப்படுவது எவ்வளவு வேதனையானது என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. தனது கறுத்த நிறத்தின் காரணமாகத் தான் பலமுறை பாகுபாடுகளைச் சந்தித்திருப்பதாகவும் பாண்டியா தெரிவித்துள்ளார். ஒருமுறை ஒரு பெண் தனது நிறத்தைக் காரணம் காட்டித் தன்னைப் பிடிக்கவில்லை என்று நிராகரித்ததையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
இத்தகைய நிறவெறி மற்றும் புறக்கணிப்புகளைக் கடந்து, இன்று அவர் உலகப் புகழ்பெற்ற ஒரு கிரிக்கெட் வீரராக உருவெடுத்திருப்பது பலருக்கும் ஒரு மிகப்பெரிய ஊக்கமாகும். திறமைக்கும் உழைப்பிற்கும் நிறம் ஒரு தடையல்ல என்பதைத் தனது வெற்றியின் மூலம் அவர் நிரூபித்துக் காட்டியுள்ளார்.
