அய்யோ… CSK-க்கு டாட்டா காட்டிய ஹர்திக்?… குறுக்கே வந்த DC… மும்பைக்கு கொடுத்த அதிரடி ஆஃபர்… ஷாக்கில் ரசிகர்கள்…!

By Swetha on ஆவணி 2, 2026

Spread the love

ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனாக தொடர் தோல்விகளைச் சந்தித்ததாலும், காயப் பிரச்சினைகளாலும் அதிருப்தியடைந்து வெளியேற முடிவெடுத்தார். பயிற்சியாளர் கெய்ரன் பொல்லார்டின் விமர்சனத்தைத் தொடர்ந்து, அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாற விரும்பிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும், ஹர்திக்கிற்குப் பதிலாக ஆயுஷ் மாத்ரே மற்றும் ஷிவம் துபேயை மும்பை அணி கேட்ட நிலையில், இளம் வீரரான மாத்ரேவை விட்டுக்கொடுக்க சிஎஸ்கே மறுத்ததால் அந்த டிரேடிங் பேச்சுவார்த்தை முடங்கியது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ரேஸில் குதித்த டெல்லி கேபிடல்ஸ், ஹர்திக் பாண்டியாவை வாங்குவதில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. ஹர்திக்கிற்காக அசுதோஷ் சர்மா மற்றும் அக்சர் படேல் ஆகிய இருவரையும் மும்பைக்கு வழங்க முன்வந்துள்ள டெல்லி அணி, அவருக்கு கேப்டன் பொறுப்பையும் வழங்க சம்மதித்துள்ளது. ஒரு திறமையான இளம் வீரரை எதிர்பார்க்கும் மும்பை இந்தியன்ஸிற்கு, இந்த ஆஃபர் மிகப்பெரிய சாதகமாக இருக்கும் என்பதால் மும்பை நிர்வாகமும் டெல்லியுடன் பேச ஆர்வமாக உள்ளது.

   

மற்றொருபுறம், லக்னோ அணியில் இருந்து வெளியேறி ரிஷப் பந்த் மீண்டும் டெல்லி அணிக்கே திரும்பவுள்ள நிலையில், ஹர்திக் பாண்டியாவும் இணைந்தால் கே.எல். ராகுல், பந்த் மற்றும் ஹர்திக் என அதிரடியான பேட்டிங் வரிசை உருவாகும். இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாத டெல்லி கேபிடல்ஸ், அடுத்த மூன்று சீசன்களுக்குள் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் நோக்கிலேயே இந்த மாஸ்டர் பிளானைச் செயல்படுத்தி வருகிறது.