தமிழகத்தில் கடக செப்டம்பர் மாதம் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடந்து முடிந்த நிலையில் தொடர்ந்து 9 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டது. அதில் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான விடுமுறை அறிவிப்பையும் கொடுத்துள்ளது. அதன்படி வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி உடன் மாணவர்களுக்கு தேர்வுகள் நிறைவடைகின்றன.
இதனைத் தொடர்ந்து டிசம்பர் 24 முதல் ஜனவரி 4 வரை 12 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பத்து நாட்களில் பொங்கல் விடுமுறை வருகின்றது. தொடர் விடுமுறையை முன்னிட்டு வெளியூர் செல்பவர்களுக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதால் முன்கூட்டியே பேருந்து மற்றும் ரயில்களில் முன்பதிவு செய்வது நல்லது.
