கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இன்று காலை முதல் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. மாணவர்கள் மழையில் நனைந்தபடி பள்ளிக்குச் சென்ற நிலையில், அவர்களின் நலன் கருதி சங்கரன்கோவில் பகுதியில் உள்ள 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று அரை நாள் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மழை நீடிக்கும் பட்சத்தில், தமிழ்நாட்டின் மேலும் சில மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
