நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், ஏற்கெனவே NDRF குழுக்கள் டெல்டாவுக்கு விரைந்துள்ளன. மேலும், சிவகங்கை, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
