நடிகர் விஜய்யின் கடைசி படம் ஆன ஜனநாயகம் படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பானது சமீபத்தில் முடிவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
ஜனநாயகன் படம் முடித்த கையோடு ஹெச்.வினோத் அடுத்து யாரை வைத்து படம் எடுக்க போகிறார் என்ற தகவல் தான் ஒவ்வொரு நாளும் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் தான் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஹெச்.வினோத் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து கதை கூறியிருக்கிறார். இதற்கு ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டால் அடுத்து இவர்கள் கூட்டணி சேருவது உறுதியாகும் என்று கூறப்படுகிறது. ரஜினி தற்போது கூலி பி படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதனைப் போலவே வினோத் அடுத்ததாக தனுஷை வைத்து படம் இயக்க உள்ளதாகவும் சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியாகி இருந்தது. தனுஷ் தற்போது இட்லி கடை படத்தில் பிசியாக உள்ள நிலையில் அந்த படத்தை முடித்த கையோடு எச். வினோத்துடன் கூட்டணி சேர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மாமனார் மற்றும் மருமகன் என இருவரிடமும் ஹெச் வினோத் கதை கூறி வரும் நிலையில் ஒருவேளை தன் முன்னாள் மாமனாருக்காக மருமகன் தனுஷ் விட்டுக் கொடுப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.
