மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் பகுதியில் நகை வியாபாரி ஒருவர் தன்னுடைய ஸ்கூட்டரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் இருந்த பிங்க் நிற கேரி பேக் தற்செயலாக தரையில் விழுந்துள்ளது. ஆனால் அந்தப் பை கீழே விழுந்ததை வியாபாரி கவனிக்காமல் சாலையில் நேராக பயணித்துக் கொண்டிருந்தார். சம்பவம் நடந்த சில நிமிடங்களில் எதிர் திசையில் வந்த இரண்டு இளைஞர்கள் தரையில் இருந்த பையை கவனித்துள்ளனர். உடனே இறங்கி சாலையில் இருந்த பையை எடுத்துப் பார்த்தபோது அதற்குள் தங்கம் இருப்பதை உறுதி செய்தனர்.
உடனே அவர்கள் ஸ்கூட்டரில் வேகமாக அங்கிருந்து தப்பிச்செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி ஆதாரத்தை வைத்து தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் தங்கம் காணாமல் போனதை உணர்ந்த நகை வியாபாரி உடனடியாக போலீசில் புகார் அளிக்க தற்போது சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அதிகாரிகள் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களையும் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை கைது செய்ய போலீசார் தொலைபேசி தேடி வரும் நிலையில் விரைவில் தங்க நகைகள் மீட்கப்படும் என்றும் போலீசார் உறுதி அளித்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
