வெற்றிமாறன் – அட்லீ சேர்ந்து எழுதிய கதையில் நடிக்கும் ஜி.வ.பிரகாஷ்.. இது வித்தியாசமான காம்போவா இருக்கே..

By Archana on மார்கழி 27, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இசையமைப்பாளர் என்றால் அது ஜிவி.பிரகாஷ் எனலாம். வரிசையாக பல படங்களை இசையமைக்க தயாராக இருக்கக் கூடிய ஜிவி. நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக அவரது இசையில் தங்கலான், கேப்டன் மில்லர் போன்ற பெரிய படங்களும் காத்திருக்கின்றன. அதுமட்டுமின்றி பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கும் புதிய வெப் சீரிஸ் ஒன்றிலும் நடிக்கவுள்ளார் ஜிவி.பிரகாஷ்.

#image_title

இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அவர் கொடுத்த ஒரு நேர்காணல் தற்போது வைரலாகி வருகிறது. ஒரு குறிப்பிட்ட இயக்குநர் மற்றும் நடிகர் இணைந்தால் அந்த கூட்டணி குறித்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்த்து காத்துகிடப்பார்கள்.

   
   

#image_title

 

அப்படியான ஒரு கூட்டணியானது முறிந்து போனது குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், இயக்குநர் அட்லீ வசனத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஒரு படம் தயாராக இருந்ததாகவும், தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் அப்படம் கைவிடப்பட்டதாகவும் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.

#image_title