#image_title
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் பா.ரஞ்சித். இவர் ‘ அட்டக்கத்தி’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானர். அதன் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கினர். சமூக ஏற்றத்தாழ்வு, சென்னையின் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் பேசும் இந்த திரைப்படங்கள் பிரமாண்ட வெற்றியை பெற்றது.
இதைத்தொடர்ந்து ரஜினியை வைத்து காலா, கபாலி ஆகிய படங்களை இயக்கி வெற்றியும் பெற்றார். அதன்பின்னர் ஆர்யாவை வைத்து அவர் இயக்கிய ‘சார்பட்டா’ திரைப்படம் ஓடிடியில் கடந்த ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இதனை அடுத்த நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கிய பா.ரஞ்சித், தற்போது விக்ரமனை வைத்து தங்கலான் படத்தை இயக்கி வருகிறார்.
தயாரிப்பாளர் ரஞ்சித் இயக்குநராக மட்டுமின்றி நீலம் புரொடக்சன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி சமூக அக்கறை கொண்ட படங்களையும் பா.ரஞ்சித் தயாரித்து வருகிறார். பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர் போன்ற வெற்றிப் படங்களை அவர நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் முதல் முறையாக, பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிக்க உள்ளார். தற்பொழுது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி உள்ளது .இந்த படத்தில் ஜீவி பிரகாஷ் ஜோடியாக, டாக்டர் ராஜசேகர் – ஜீவிதா நட்சத்திர ஜோடிகளின் மகள் ஷிவானி ராஜசேகர் நடிக்கிறார்.
இயக்குனர் பா . ரஞ்சிதா அவர்களின் உதவி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் அகிரன் மோசஸ் இயக்க உள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பசுபதி, ஸ்ரீநாத்பாஸி, லிங்கேஷ், விஷ்வாந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தற்பொழுது இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…