அடுத்த படத்துக்காக பா. ரஞ்சித் உடன் ஜி வி பிரகாஷ்… பிரபல நடிகரின் மகள் தான் ஹீரோயினா..? வெளியான ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ்…

By Begam on மாசி 29, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி  ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் பா.ரஞ்சித். இவர் ‘ அட்டக்கத்தி’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானர். அதன் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கினர். சமூக ஏற்றத்தாழ்வு, சென்னையின் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் பேசும் இந்த திரைப்படங்கள் பிரமாண்ட வெற்றியை பெற்றது.

   

இதைத்தொடர்ந்து ரஜினியை வைத்து காலா, கபாலி ஆகிய படங்களை இயக்கி வெற்றியும் பெற்றார்.  அதன்பின்னர் ஆர்யாவை வைத்து அவர் இயக்கிய ‘சார்பட்டா’ திரைப்படம் ஓடிடியில் கடந்த ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இதனை அடுத்த நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கிய பா.ரஞ்சித், தற்போது விக்ரமனை வைத்து தங்கலான் படத்தை இயக்கி வருகிறார்.

   

 

தயாரிப்பாளர் ரஞ்சித் இயக்குநராக மட்டுமின்றி நீலம் புரொடக்சன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி சமூக அக்கறை கொண்ட படங்களையும் பா.ரஞ்சித் தயாரித்து வருகிறார். பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர் போன்ற வெற்றிப் படங்களை அவர நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் முதல் முறையாக, பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிக்க உள்ளார். தற்பொழுது  இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி உள்ளது .இந்த படத்தில் ஜீவி பிரகாஷ் ஜோடியாக, டாக்டர் ராஜசேகர் – ஜீவிதா நட்சத்திர ஜோடிகளின் மகள் ஷிவானி ராஜசேகர் நடிக்கிறார்.

இயக்குனர் பா . ரஞ்சிதா அவர்களின் உதவி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் அகிரன் மோசஸ் இயக்க உள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பசுபதி, ஸ்ரீநாத்பாஸி, லிங்கேஷ், விஷ்வாந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தற்பொழுது இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.