Categories: சினிமா

சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த போதே நடிப்பை நிறுத்திவிட்டு மதம் மாறி போதகர் ஆன பிரபல நடிகர்..

Spread the love

தமிழ் சினிமாவில் 60 கள் மற்றும் 70 களில் மினிமம் கியாரண்டி நடிகராக இருந்தவர் ஏவிஎம் ராஜன். புதுக்கோட்டையை பூர்விகமாக கொண்ட அவரின் இயற்பெயர் சண்முகசுந்தரம். இவரது பெற்றோர் அவரை போலீஸாக்க வேண்டுமென்ற ஆசையில் சென்னையில் பரீட்சை எழுத அனுப்பியுள்ளனர். ஆனால் அந்த தேர்வில் அவர் தேர்ச்சி பெறவில்லை. அதன் பிறகு சென்னை ஆளுநர் மாளிகையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

ஆனால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் வாய்ப்புகளை தேடி அலைந்துள்ளார். அப்போதுதான் இயக்குனர் கே.சங்கர் இயக்கத்தில் 1959ல் சிவகங்கை சீமை படத்தில் நடித்தார். ஆனால் படம் எடிட் செய்யப்பட்ட போது அவர்  நடித்தக் காட்சிகளைக் கட் செய்துள்ளனர்.

அவருக்கு ஆயிரங்காலத்துப் பயிர் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து நானும் ஒரு பெண் படத்தில் நடித்தார். ஏவிஎம் தயாரித்த அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது. அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் 1967ல் வெளியான கற்பூரம் திரைப்படம்தான். இந்த படத்துக்காக சிறந்த நடிகருக்கான மாநில விருது கிடைத்தது.

அவர் நடிப்பில் வெளியான ஆயிரம் காலத்து பயிர், பார்மகளே பார், துளசி மாடம், சித்ராங்கி, பச்சை விளக்கு, தெய்வம், ஆண்டவன் கட்டளை, நம்ம வீட்டு லட்சுமி, வீர அபிமன்யு, மேஜர் சந்திரகாந்த், கொடிமலர் போன்ற படங்கள் குறிப்பிடத்தகுந்த படங்களாக அமைந்தன.

அதன் பின்னர் பல படங்களில் நடித்தார். அதில் அவர் நடித்த பக்தி படங்கள் இன்றளவும் பெயர் சொல்லும் படங்களாக அமைந்துள்ளன. சிவாஜியை போல அதீத நடிப்பைக் கொடுத்த கத்தி கத்தி பேசி நடித்து தனி முத்திரையைப் பதித்தார். சினிமாவில் நல்ல நிலையில் இருந்த போதே ஏவிஎம்.ராஜன் மதம் மாறி முழுநேர கிறிஸ்தவ போதகரானார். அதன் பின்னர் சினிமாவில் நடிப்பதையும் நிறுத்தினார். அன்று முதல் இன்றுவரை தீவிரமாக கிறிஸ்துவ மத போதகராக இருந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

vinoth

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

3 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

3 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

5 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

5 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

5 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

6 மணத்தியாலங்கள் ago