#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் தயாராகியுள்ளது. லைக்கா தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அஜர்பைஜானில் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளதாக சொல்லப்படும் நிலையில் மீதம் ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட உள்ளது. டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#image_title
ஆனால் அதற்கு முன்னதாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடித்து வரும் மற்றொரு திரைப்படமான குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அஜித் மற்றும் ஆதிக் என வித்தியாசமான கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.
#image_title
கட்டாயம் அஜித்தின் திரைப்பாடல் வித்தியாசமான படமாக இந்த திரைப்படம் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் வரலாறு திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இப்படத்தின் மூலம் அஜித் மூன்று ரோல்களில் நடிக்கின்றார். இதுவும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி உள்ளது. இந்த படத்தில் கங்குவா படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் முதலில் கமிட்டாகியிருந்த நிலையில் படத்திலிருந்து விலகியுள்ளார். ஏனெனில் படத்திற்கு 4 பாடல் இருந்த நிலையில் ஒரு பாடல் கூட முடித்து குடுக்கவில்லையாம். படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்ததால் ஆதிக் அவசரப்பட்டுள்ளார்.
#image_title
ஆனால் இவரோ காலம் தாழ்த்தியதால் வரை நீக்கிவிட்டு ஜிவி பிரகாஷிடம் சென்றுள்ளார். ஜிவி பிரகாஷ் ஆதிக் ரவிச்சந்திரனின் திரிஷா இல்லனா நயன்தாரா படத்திற்கு இசையமைத்து கொடுத்து செம ஹிட் கொடுத்தது. ஆனாள் இவரை விட்டுவிட்டு DSP யிடம் சென்றுள்ளார் ஆதிக். இப்போது கடைசியில் ஜிவி பிரகாஷிடமே வந்துள்ளார். ஜிவி பிரகாஷ் நான் முடித்து கொடுக்கிறேன் கவலைப்படாதீங்க என்று சொல்லியிருக்கிறாராம். இதனால் அதிக நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்.
சின்னத்திரை மற்றும் சினிமா உலகில் சமீப காலமாக இளம் வயது பிரபலங்களின் மரணங்கள் தொடர்கதையாகி வருவது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை…
வீடுகளில் பயன்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கும் தங்கத்தை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தும் நோக்கில், 'தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை' முழுவீச்சில்…
தமிழக அரசியலில் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியிருப்பது, தமிழக வெற்றிக் கழகம் மேற்கொண்டு வரும் 'ஆள் தூக்கும்' அரசியல்…
2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத…
மத்தியப் பிரதேச மாநிலம் சின்வாரா மாவட்டத்தில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதம், ஒரு குடும்பத்தையே சிதைத்து நீதிமன்றத் தீர்ப்பு வரை…
தமிழக அரசியல் களத்தில் தற்போது ஒரு புதிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஇஅதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வர்…