எல்லா வித வேண்டுதலுக்கும் கடவுளுக்கு சாற்றப்படும் மாலை… கனிமாலை எனப்படும் எலுமிச்சை மாலையின் மகத்துவங்கள்…

Spread the love

நம் எல்லோருக்கும் ஏதாவது ஒரு வேண்டுதல் இருக்கும். அந்த வேண்டுதல் நிறைவேற கடவுளிடம் முறையிடுவோம். கடவுள்களுக்கு விருப்பமான நெய்வேத்தியங்கள் ஆடைகள் மாலைகள் போன்றவற்றை சாற்றி இறைவனின் காலடியில் நமது வேண்டுதல்களை வைப்போம். அப்படி எல்லா கடவுள்களுக்கும் சாற்றக்கூடிய எலுமிச்சை மாலையின் மகத்துவங்கள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? அதைப்பற்றி இனி காண்போம்.

புதிதாக தொழில் தொடங்குபவர்கள் ஏதாவது புதிய காரியத்தை தொடங்குபவர்கள் அந்த காரியம் வெற்றி அடைய வேண்டுமே என்று நினைப்பார்கள். ஆனால் எல்லோருக்கும் நல்லது நடப்பது போல கெட்டதும் நடக்கும். புதிதாக தாவது ஒரு காரியம் செய்ய முயற்சிக்கும் போது எதிரிகள் இருந்தால் அவர்களின் தொல்லை நமக்கு இருக்கும். நாம் முன்னேற கூடாது என்று பலவித தடைகளை ஏற்படுத்துவார்கள்.

வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் எதிர்ப்புகளை சமாளிக்க நமக்கு உதவு்வது உக்கிர தெய்வங்கள். உக்கிர தெய்வங்களாக இருக்கும் காளி துர்க்கை பத்திரகாளி போன்ற கடவுள்களுக்கு அமாவாசை பௌர்ணமி செவ்வாய் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் எலுமிச்சை மாலையை சாற்றி வந்தால் எதிரிகள் தொல்லை இன்றி வாழலாம்.

இந்த தெய்வங்களுக்கு தவிர மாரியம்மன் நடராஜர் பைரவர் ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களை வழிபாடு செய்யும்போது எலுமிச்சை மாலை சாற்றுவார்கள். மற்ற எல்லா மாலைகளை விட எலுமிச்சை மாலைக்கு தனிச்சிறப்பு இருக்கிறது. எலுமிச்சை மாலையை சாற்றுவதால் கடவுள்கள் மனம் குளிர்வார்கள் என்று நம்பப்படுகிறது. எலுமிச்சைக்கு தேவ கனி என்ற பெயரும் உண்டு. இதை கனிமாலை என்றும் கூறுவர்.

குழந்தை வரம் வேண்டுகோர் திருமணம் கைகூட வேண்டும் என்று நினைப்பவர்கள் எடுத்த காரியம் தடை இல்லாமல் நிறைவேற வேண்டும் தீராத கஷ்டங்களாக இருக்கிறது கஷ்டத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களது இஷ்ட தெய்வங்களுக்கு எலுமிச்சை மாலையை சாற்றி வரும்பொழுது நிச்சயம் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். இந்த எலுமிச்சை மாலையை ஒற்றைப்படை எண்ணிக்கையில் தான் கட்ட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

admin

Recent Posts

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

14 minutes ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

25 minutes ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

38 minutes ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

38 minutes ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

44 minutes ago

“இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சலுகை ரத்து” கைவிரித்த அமெரிக்கா… வெனிசுலாவை நோக்கி ஓட வேண்டிய கட்டாயம் – கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் பூகம்பம்..!!

கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…

54 minutes ago