தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் தான் ஜிவி பிரகாஷ். இவர் வெயில் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் இளம் வயதிலேயே இசையமைப்பாளராக அறிமுகமானார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே வேற லெவல் ஆல்பத்தை கொடுத்திருந்த இவர் அதன் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளராகவும் தற்போது மிக சிறந்த நடிகராகவும் உருவாகி இருக்கின்றார். மேலும் ஜிவி பிரகாஷ் குமார் ஏ ஆர் ரகுமானின் சகோதரியின் மகன்தான்.

சிறுவயதிலேயே ஏ ஆர் ரகுமான் இசையில் சில பாடல்களில் அவரது மழலை குரல் ஒலித்து இருக்கிறது. தற்போது முன்னணி இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராகவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.முதலில் இவர் ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தில் ஒரு பாடகராக அறிமுகமாகி அதன் பிறகு வெயில் என்ற திரைப்படத்தில் இசையமைத்து தான் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார்.


தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படத்திற்கு இவர் இசையமைத்துள்ளார். இப்படியான நிலையில் ஜிவி பிரகாஷ் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும் உள்ளார். இப்படியான நிலையில் கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் திடீரென விவாகரத்தை அறிவித்த நிலையில் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேர அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இப்படியான நிலையில் விவாகரத்திற்கு பிறகும் பல இசை நிகழ்ச்சிகளில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் சேர்ந்து பணியாற்றி வருவது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஜி வி பிரகாஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் பதில் அளிக்கும் போது, நாங்கள் தீவிர தொழில் வல்லுனர்கள். எங்களுடைய பரஸ்பர மரியாதை உள்ளது. அந்த மரியாதையின் காரணமாகவே நாங்கள் இருவரும் தொடர்ந்து ஒன்றாக பணியாற்றுகிறோம் என்று பதில் அளித்துள்ளார்.
