சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை கடந்த 25ஆம் தேதி போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தை எதிர்த்து எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தமிழக முழுவதும் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கல்லூரி மாணவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரும் இந்த சம்பவம் தொடர்பாக எதிர்ப்பு குரலை செய்து வருகிறார்கள். இப்படியான நிலையில் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் மாணவிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
)
தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுடன் நான் உறுதுணையாக நிற்கிறேன். நம் பெண்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும். குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும். அவரைப் போன்றவர்களை வெளியே விடக்கூடாது என்று அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
I stand in solidarity with the anna university students …. More power to our girls … #AnnaUniversity … let the convict deserve the highest punishment possible and people like him shouldn’t be let out ever ..
— G.V.Prakash Kumar (@gvprakash) December 27, 2024
