“என் தொழில் இவனோட முடியனும்”…. சாமி பீடத்தில் 10 வயது மகனை பலிகொடுத்த பூசாரி தந்தை… அதிர்ச்சி காரணம்…. திடுக்கிடும் சம்பவம்….!

Spread the love

குஜராத் மாநிலம் சனாந்த் அருகே உள்ள வின்சியா கிராமத்தில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று ஒட்டுமொத்த தேசத்தையும் உரைய வைத்துள்ளது. நரேஷ் (37) என்ற கூலித்தொழிலாளி, தன் பரம்பரைத் தொழிலான பூசாரி வேலை, குறி சொல்வது மற்றும் பேய் விரட்டும் பணிகளைச் செய்து வந்தார். தனது தந்தையிடம் இருந்து இந்தத் தொழிலைக் கற்றுக்கொண்ட அவர், வீட்டில் அமைக்கப்பட்டிருந்த ஜோகனி மாதா தெய்வத்தின் சாமி பீடத்தில் வைத்துப் பூஜைகள் செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி தாய் வீட்டிற்குச் செல்ல, 10 வயது மகன் கரண் தேர்வின் காரணமாகத் தந்தையுடன் வீட்டில் தங்கியுள்ளான்.

எந்தவொரு பெற்றோரும் தான் படும் கஷ்டங்களையும் சமூகத்தில் மதிப்பற்ற சூழலையும் தன் பிள்ளைகள் அனுபவிக்கக் கூடாது என்றே நினைப்பார்கள். அதற்காகத் தம் பிள்ளைகளுக்குப் பிடித்த வேறு நல்ல படிப்பையோ, துறையையோ தேடித் தருவதே இயல்பான நடைமுறை. ஆனால், நரேஷ் தன் மகன் இத்தொழிலுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகத் தேர்ந்தெடுத்த வழி இரக்கமற்ற கொடூரம். மாலையில் சாமி பீடத்தின் அருகில் அலறல் சத்தம் கேட்டுப் பக்கத்து வீட்டினர் வந்து பார்த்தபோது, சிறுவன் கரண் தலையில் பலத்த காயங்களுடன் கட்டிலில் பிணமாகக் கிடந்துள்ளான்; அருகிலேயே நரேஷ் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ச்சி தரும் காட்சியைக் கண்டு காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் சிறுவனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, நரேஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தான் செய்த கொடூரத்தை ஒப்புக் கொண்ட நரேஷ், “என் தந்தையைப் போல நானும் குறிசொல்லுவது, பேய் விரட்டுவது போன்ற தொழில்களைச் செய்து வருகிறேன். இந்தத் தொழில் என்னோடு முடிவடைய வேண்டும்; என் மகன் இதைத் தொடரக் கூடாது என்பதால், அவனைத் தோட்டத்திலிருந்து இழுத்து வந்து கட்டையால் தாக்கி, சாமி பீடத்தில் தலையை முட்ட வைத்துக் கொன்றேன்” என வாக்குமூலம் அளித்துள்ளார்.

தாய் பாரதி பென் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் நரேஷைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். மூடநம்பிக்கையும், தவறான எண்ணமும் ஒரு தந்தையைத் தனது சொந்த மகனையே பலி வாங்கும் அளவுக்குக் கொண்டு சென்றுள்ள இச்சம்பவம் சமூக ஆர்வலர்களையும் பொதுமக்களையும் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“எனக்கு எதாவது ஆச்சுன்னா மாமியார் தான் காரணம்”…. உயிரிழக்கும் முன் இளம் பெண் அனுப்பிய பகீர் மெசேஜ்…. பின்னணியில் வெளிவந்த அதிர்ச்சி காரணம்….!

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் முகுந்த் நகர் பகுதியில் நடைபெற்ற துயரச் சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.…

5 minutes ago

“18 தையல்கள்…. சென்னை தாம்பரம் அருகே அரங்கேறிய பயங்கரம்”…. ஆப் வழியே நடந்த அந்த ஒரு போன் கால்…. வெளிவந்த அதிர்ச்சி உண்மை….!

சென்னை தாம்பரம் அருகே செல்போன் செயலி வாயிலாகப் பெண் குரலில் பேசி இளைஞர் ஒருவரைத் தனியாக வரவழைத்து, பணம் கேட்டு…

10 minutes ago

விஜய்யை வீழ்த்த செந்தில் பாலாஜி போடும் மெகா கணக்கு… கரூரில் களமிறங்கும் ஸ்டாலின்?…. திமுக வட்டாரத்தில் பதற்றம்….!

தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான அரசு கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி நடத்தி வரும் நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த தாராபுரம் மற்றும்…

19 minutes ago

“விஜய் போட்ட அதிரடி உத்தரவு…. கோட்டையில் பயத்தில் நடுங்கும் அமைச்சர்கள்”….. ஷாக் ஆன உளவுத்துறை…!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையிலான புதிய ஆட்சியில், அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் வகிக்கும் மின் மற்றும்…

30 minutes ago

“5 தொகுதி இடைத்தேர்தல்… உள்ளாட்சித் தேர்தல் ஷாக்”…. தவெகவின் அடுத்த அதிரடி மூவ்…. ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை வீச முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்…!

தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான (பெருந்துறை, கரூர், திருச்சிராப்பள்ளி கிழக்கு, விராலிமலை, அம்பாசமுத்திரம்) இடைத்தேர்தல் அறிவிப்பு இந்த…

36 minutes ago

“பனையேறியது ரகசிய ரிப்போர்ட்”….. 6 மாத ஆட்சியில் முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு… கலக்கத்தில் முக்கிய அமைச்சர்கள்….!

தமிழக அரசியலில் மாபெரும் திருப்பமாக, நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' 2026 சட்டசபை தேர்தலில் தனித்து களமிறங்கி அமோக…

41 minutes ago