“5 தொகுதி இடைத்தேர்தல்… உள்ளாட்சித் தேர்தல் ஷாக்”…. தவெகவின் அடுத்த அதிரடி மூவ்…. ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை வீச முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்…!

Spread the love

தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான (பெருந்துறை, கரூர், திருச்சிராப்பள்ளி கிழக்கு, விராலிமலை, அம்பாசமுத்திரம்) இடைத்தேர்தல் அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவெக தலைவர் விஜய்யும், அவரது அமைச்சர்களும், ஆலோசகர்களும் இந்த ஐந்து தொகுதிகளிலும் தங்களது கட்சி அமோக வெற்றி பெறும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். இந்த வெற்றியின் அலை அடங்குவதற்கு முன்பாகவே, தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலையும் விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என்ற யோசனை முதல்வர் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

கள நிலவரத்தை துல்லியமாக அறிந்து கொள்ளும் பொருட்டு, அனைத்து இடங்களிலும் தகுதியான வேட்பாளர்கள் உள்ளார்களா என்பது குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு தனது ஆலோசகர்களை முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், கட்சியின் பலத்தை பரிசோதிக்க அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் ‘வாய்ஸ் ஆஃப் காமன்’ அமைப்பும் தீவிர களப்பணியில் இறங்கத் திட்டமிட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட சென்னையில் தவெகவின் பலம் ஓங்கியுள்ள நிலையில், அதே வெற்றியை உள்ளாட்சித் தேர்தலிலும் தக்கவைக்க தீவிர வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

நிர்வாக நலன்களையும், கட்சி உத்திகளையும் கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சியை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது வலுப்பெற்றுள்ளது. சென்னை மாநகராட்சி மிகவும் பரந்து விரிந்து கிடப்பதால் ஒரே மேயரால் முழுமையான நிர்வாகத்தைக் கவனிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, நிர்வாக வசதிக்காகவும், மத்திய அரசு மற்றும் வெளிநாட்டு நிதி உதவிகளை எளிதில் பெறவும், சென்னையை தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை என மூன்று தனித்தனி மாநகராட்சிகளாகப் பிரிக்கலாம் என்ற ஆலோசனைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னையை மூன்று மாநகராட்சிகளாகப் பிரிப்பதன் மூலம் தவெகவிற்குக் ஒரே நேரத்தில் மூன்று மேயர் பதவிகளைக் கைப்பற்ற வாய்ப்பு கிடைப்பதோடு, திமுகவை அரசியல் களத்தில் மிக எளிதாக எதிர்கொள்ளவும் முடியும் என்று நம்பப்படுகிறது. இது தொடர்பாக அமைச்சர்களும், கட்சியின் முக்கிய ஆலோசகர்களும் முதல்வர் விஜய்யுடன் விரிவாக விவாதிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த அதிரடி நகர்வுகள் தற்போது சென்னை மாவட்ட தவெக செயலாளர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

Nanthini

Recent Posts

450 டன் வெங்காயம் திடீர் மாயம்?…. ரேஷன் கடையில என்ன நடக்குது?…. இபிஎஸ் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்….!

தற்போது வெங்காயத்தின் விலை சந்தையில் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், மக்களுக்காகக் கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயம் லாரிகளில் இருந்து இறக்கப்படாமல் வீணடிக்கப்பட்டு…

3 minutes ago

அடகொடுமையே!… தீபாவளி டார்கெட்… இது என்ன புது மாடல் திருட்டு?… நடுங்க வைத்த மர்ம பெண்கள்… வைரல் சிசிடிவி காட்சி…!!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், குஜராத்தின் சூரத் மற்றும் நவசாரி பகுதிகளில் இயங்கி வரும் வணிக நிறுவனங்களைக் குறிவைத்து…

9 minutes ago

“எனக்கு எதாவது ஆச்சுன்னா மாமியார் தான் காரணம்”…. உயிரிழக்கும் முன் இளம் பெண் அனுப்பிய பகீர் மெசேஜ்…. பின்னணியில் வெளிவந்த அதிர்ச்சி காரணம்….!

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் முகுந்த் நகர் பகுதியில் நடைபெற்ற துயரச் சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.…

19 minutes ago

“18 தையல்கள்…. சென்னை தாம்பரம் அருகே அரங்கேறிய பயங்கரம்”…. ஆப் வழியே நடந்த அந்த ஒரு போன் கால்…. வெளிவந்த அதிர்ச்சி உண்மை….!

சென்னை தாம்பரம் அருகே செல்போன் செயலி வாயிலாகப் பெண் குரலில் பேசி இளைஞர் ஒருவரைத் தனியாக வரவழைத்து, பணம் கேட்டு…

23 minutes ago

விஜய்யை வீழ்த்த செந்தில் பாலாஜி போடும் மெகா கணக்கு… கரூரில் களமிறங்கும் ஸ்டாலின்?…. திமுக வட்டாரத்தில் பதற்றம்….!

தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான அரசு கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி நடத்தி வரும் நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த தாராபுரம் மற்றும்…

32 minutes ago

“விஜய் போட்ட அதிரடி உத்தரவு…. கோட்டையில் பயத்தில் நடுங்கும் அமைச்சர்கள்”….. ஷாக் ஆன உளவுத்துறை…!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையிலான புதிய ஆட்சியில், அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் வகிக்கும் மின் மற்றும்…

44 minutes ago