“பனையேறியது ரகசிய ரிப்போர்ட்”….. 6 மாத ஆட்சியில் முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு… கலக்கத்தில் முக்கிய அமைச்சர்கள்….!

Spread the love

தமிழக அரசியலில் மாபெரும் திருப்பமாக, நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ 2026 சட்டசபை தேர்தலில் தனித்து களமிறங்கி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பெரும்பான்மை இல்லாத சூழலில், தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய்யின் 6 மாத கால ஆட்சி தற்போது நிறைவடைந்துள்ளது. மே மாதம் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பை வெற்றிகரமாகக் கடந்த நிலையில், தற்போது தலைமைச் செயலக வட்டாரங்களிலும் கட்சித் தலைமைக் அலுவலகத்திலும் புதிய அரசியல் அலைகள் வீசத் தொடங்கியுள்ளன.

கடந்த 6 மாதகால ஆட்சியில், தவெகவைச் சேர்ந்த சில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, மாவட்ட செயலாளர்கள் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் கவுன்சிலர் சீட்டுகள் மற்றும் கட்சிப் பொறுப்புகளைத் தருவதாகக் கூறி பல லட்ச ரூபாய் வசூலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் தலைமைக்குச் சென்றடைந்தன. மேலும், உள்ளூர் அரசு நிர்வாகத்திலும், டெண்டர் செயல்பாடுகளிலும் மாவட்ட செயலாளர்களின் அதிகப்படியான தலையீடு இருந்தது தலைமைக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய்யின் நேரடி உத்தரவின் பேரில் அமைச்சர்கள் மற்றும் கட்சி முக்கிய புள்ளிகளின் செயல்பாடுகள் கடந்த சில மாதங்களாக உளவுத்துறை மூலம் ரகசியமாகக் கண்காணிக்கப்பட்டு வந்தன. கட்சித் தலைமையின் வழிகாட்டுதலை மீறி செயல்பட்டவர்கள், நிதி முறைகேடுகளில் சிக்கியவர்கள் மற்றும் மக்களிடையே நற்பெயரை இழந்தவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு தற்பொழுது முதலமைச்சரின் கவனத்திற்குச் சென்றுள்ளது. உளவுத்துறை அளித்த இந்த ‘டீலிங் ரிப்போர்ட்’ பனையூர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிர்ச்சி அறிக்கையைத் தொடர்ந்து, கட்சியிலும் ஆட்சியிலும் மிக விரைவில் அதிரடி மாற்றங்களைச் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார். மோசமான செயல்பாடுகளைக் கொண்ட சில அமைச்சர்கள் கேபினட்டில் இருந்து கழற்றிவிடப்பட்டு, புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படவுள்ளது; சில மூத்த அமைச்சர்களின் இலாகாக்கள் பறிக்கப்படவும் வாய்ப்புள்ளது. மேலும் கட்சி அமைப்பை வலுப்படுத்தும் விதமாக, தற்போது நடைமுறையில் உள்ள ‘இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர்’ என்ற முறையை மாற்றி, ‘ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர்’ என்ற புதிய நிர்வாக முறையைக் கொண்டுவரவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் அமைந்த தமிழக அரசு தனது 6 மாத ஆட்சிக் காலத்தைக் கடந்துள்ள நிலையில், கட்சியின் நிர்வாகக் கட்டமைப்பிலும் அமைச்சரவையிலும் மிக விரைவில் மாபெரும் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தலைமைச் செயலகம் மற்றும் பனையூர் கட்சித் தலைமை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2024-இல் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம், விழுப்புரம் மாநாட்டின் மூலம் அதிகாரப்பூர்வ அரசியலில் களமிறங்கி, 2026 சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் கூட்டணி ஏதுமின்றி தனித்துப் போட்டியிட்டது. திமுக மற்றும் அதிமுக தலைமையிலான பலமிக்க கூட்டணிகளைப் பின்னுக்குத் தள்ளி தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தபோதிலும், ஆட்சிமைக்கத் தேவையான தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் இணைந்து அமைச்சரவை அமைக்கப்பட்டது; கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன.

மே மாதம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்று ஆட்சியமைத்து 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள சூழலில், தவெகவைச் சேர்ந்த சில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் தலைமையைச் சென்றடைந்துள்ளன. குறிப்பாக, மாவட்ட செயலாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் கவுன்சிலர் சீட்டுகளையும், கட்சிப் பொறுப்புகளையும் தருவதாகக் கூறி பல லட்ச ரூபாய் வசூல் செய்ததாகவும், உள்ளூர் அரசு நிர்வாக செயல்பாடுகளில் அளவுக்கு அதிகமாகத் தலையிடுவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து, உளவுத்துறை மூலமாக அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் செயல்பாடுகள் ரகசியமாகக் கண்காணிக்கப்பட்டு, அவர்களது புகார்கள் அடங்கிய விரிவான பட்டியல் தயாரித்து முதலமைச்சரின் கவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், கட்சித் தலைமையின் உத்தரவை மீறிய அமைச்சர்களின் இலாகாக்கள் பறிக்கப்படலாம் அல்லது கேபினட்டில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டு புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், கட்சி நிர்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில் ‘இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர்’ என்ற தற்போதைய முறையை மாற்றி, ‘ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர்’ வீதம் புதிய நியமனங்களை மேற்கொள்ளவும் உளவுத்துறை பரிந்துரையின் பேரில் முதல்வர் பரிசீலித்து வருகிறார்.

Nanthini

Recent Posts

அடகொடுமையே!… தீபாவளி டார்கெட்… இது என்ன புது மாடல் திருட்டு?… நடுங்க வைத்த மர்ம பெண்கள்… வைரல் சிசிடிவி காட்சி…!!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், குஜராத்தின் சூரத் மற்றும் நவசாரி பகுதிகளில் இயங்கி வரும் வணிக நிறுவனங்களைக் குறிவைத்து…

3 minutes ago

“எனக்கு எதாவது ஆச்சுன்னா மாமியார் தான் காரணம்”…. உயிரிழக்கும் முன் இளம் பெண் அனுப்பிய பகீர் மெசேஜ்…. பின்னணியில் வெளிவந்த அதிர்ச்சி காரணம்….!

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் முகுந்த் நகர் பகுதியில் நடைபெற்ற துயரச் சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.…

12 minutes ago

“18 தையல்கள்…. சென்னை தாம்பரம் அருகே அரங்கேறிய பயங்கரம்”…. ஆப் வழியே நடந்த அந்த ஒரு போன் கால்…. வெளிவந்த அதிர்ச்சி உண்மை….!

சென்னை தாம்பரம் அருகே செல்போன் செயலி வாயிலாகப் பெண் குரலில் பேசி இளைஞர் ஒருவரைத் தனியாக வரவழைத்து, பணம் கேட்டு…

17 minutes ago

விஜய்யை வீழ்த்த செந்தில் பாலாஜி போடும் மெகா கணக்கு… கரூரில் களமிறங்கும் ஸ்டாலின்?…. திமுக வட்டாரத்தில் பதற்றம்….!

தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான அரசு கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி நடத்தி வரும் நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த தாராபுரம் மற்றும்…

25 minutes ago

“விஜய் போட்ட அதிரடி உத்தரவு…. கோட்டையில் பயத்தில் நடுங்கும் அமைச்சர்கள்”….. ஷாக் ஆன உளவுத்துறை…!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையிலான புதிய ஆட்சியில், அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் வகிக்கும் மின் மற்றும்…

37 minutes ago

“5 தொகுதி இடைத்தேர்தல்… உள்ளாட்சித் தேர்தல் ஷாக்”…. தவெகவின் அடுத்த அதிரடி மூவ்…. ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை வீச முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்…!

தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான (பெருந்துறை, கரூர், திருச்சிராப்பள்ளி கிழக்கு, விராலிமலை, அம்பாசமுத்திரம்) இடைத்தேர்தல் அறிவிப்பு இந்த…

43 minutes ago