சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த ஹயத்துன்நிஷா (38) என்பவரை, அவரது கள்ளக்காதலனான அசாமைச் சேர்ந்த மானிக்உதின்லஸ்கர் மற்றும் அவரது காதலி பகபதிமாஜி ஆகியோர் திட்டமிட்டு கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. ஹயத்துன்நிஷாவிடம் முன்பே பணம் மற்றும் நகைகளைப் பெற்றிருந்த இந்த ஜோடி, அவருடன் ஏற்பட்ட பழக்கத்தை சாதகமாக்கிக் கொண்டு சமாதானம் பேசுவது போல அவரது வீட்டிலேயே இரண்டு வாரங்கள் தங்கியுள்ளது. நிஷா கர்ப்பமாகி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால், இந்தத் திட்டமிட்டக் கொலையை அவர்கள் அரங்கேற்றியதாகப் போலீசார் தெரிவிக்கின்றனர்.
பல்லாவரம் சந்தையில் ஆடு வெட்டும் கத்திகளை வாங்கி வந்த அந்த ஜோடி, இரவில் நிஷாவிற்கு மயக்க மருந்து கொடுத்து, கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளது. ஆட்டின் தோலை உரிப்பது போல அவரது உடலைப் பிளந்து, உடற்பாகங்களைத் தனித்தனியாக வெட்டியுள்ளனர். மேலும், உடலிலிருந்து சிந்திய ரத்தத்தை பிரியாணி பாத்திரத்தில் பிடித்துச் சேகரித்து வைத்திருந்ததுடன், ரத்தக்கறையை மறைக்க மைதா மாவையும் பயன்படுத்தியுள்ளனர். தலை மற்றும் கைகள் இல்லாத உடல் பாகங்களை சூட்கேஸில் அடைத்து, சென்னை சென்ட்ரலில் இருந்து டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்றிவிட்டு தப்பியுள்ளனர்.
ஆக்ரா அருகே ரயிலில் கண்டெடுக்கப்பட்ட அந்த சூட்கேஸைக் கொண்டு விசாரணையைத் தீவிரப்படுத்திய காவல் துறையினர், மணிப்பூரில் பதுங்கியிருந்த கொலையாளிகள் இருவரையும் தனிப்படை அமைத்துக் கைது செய்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலம் காவல் துறையினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நிஷாவின் தலையை மொட்டையடித்து, கண்களைப் பிடுங்கி, தோலை உரித்து வெவ்வேறாகப் பைகளில் போட்டுக் கொண்டு சென்றதாகக் கொடூரத்தின் உச்சத்தை வாக்குமூலத்தில் அவர்கள் விவரித்துள்ளனர்.
இந்தக் கொடூரச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள இருவரைத் தவிர, காரில் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் மேலும் 4 பேருக்குத் தொடர்பிருக்கலாம் என்ற புதிய கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். குற்றவாளிகளைச் சம்பவ இடங்களுக்கு அழைத்துச் சென்று கொலை நடந்த முறையை நடித்துக் காட்டவும், மீதமுள்ள உடல் பாகங்களைக் கைப்பற்றவும் தனிப்படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பம்பாசி-சின்ச்வாட் பகுதியில் போக்குவரத்து போலிஸார் நடத்திய தீவிர வாகனச் சோதனையின் போது, போலி 'எம்.எல்.ஏ' ஸ்டிக்கர்களை…
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, ஹைதராபாத்தின் பேகம்பஜார் ஃபீல்ட் கானாவில் நிறுவப்பட்டுள்ள 48 கிலோ எடை கொண்ட தங்க விநாயகர் சிலை…
துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை 2026 இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாம்பியன்…
டெல்லியில் தொழிலாளியாகப் பணிபுரியும் ஒருவரின் மனைவி, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் காதலில் விழுந்துள்ளார். கணவர் இல்லாத நேரத்தில்…
ஹைதராபாத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஜோடிக்கு உதவியதற்காக, கார்த்திக் என்ற வாலிபர் விநாயகர் மண்டபத்தில் வைத்து ரவுடிகளால் கொடூரமாகக்…
புதுடெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் கலந்துகொண்ட அபுதாபி இளவரசர் ஷேக் காலித்…