கூகுள் தேடலில் கொடூர ஐடியா.. பிரியாணி அண்டா, 14 லிட்டர் வினிகர்…. கூடுவாஞ்சேரி கொலையில் வெளிவந்த பயங்கரம்…. தம்பதி கொடுத்த பகீர் வாக்குமூலம்….!

Spread the love

சென்னை புறநகர்ப் பகுதியான கூடுவாஞ்சேரியில் அரங்கேறியுள்ள ஹயாத்துன் நிஷா என்ற பெண்ணின் படுகொலை சம்பவம், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் உறைையையும் ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாத்துன் நிஷா, குடும்பத் தகராறு காரணமாகக் கணவரைப் பிரிந்து தனது மகனுடன் சென்னை வந்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அங்கு பணிபுரிந்த மாணிக் உத்தீன் லஸ்கர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. மாணிக் உத்தீனின் மனைவி பகாபதி மாஜியும் இந்த உறவுக்கு ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, மூவரும் கூடுவாஞ்சேரியில் ஒரே வீட்டில் வாடகைக்குத் தங்கி வந்துள்ளனர்.

இந்நிலையில், இரண்டு மாத கர்ப்பிணியான ஹயாத்துன் நிஷா, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மாணிக் உத்தீனை வற்புறுத்தியுள்ளார். ஆனால், கருவைக் கலைக்க தம்பதியினர் வலியுறுத்தியதால் இரு தரப்பிற்கும் இடையே கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. நிஷா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் போவதாக மிரட்டியதால், ஆத்திரமடைந்த தம்பதியினர் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டனர். கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி உணவில் விஷம் கலந்து கொடுத்து நிஷாவைக் கொன்ற தம்பதியினர், சடலத்தை யாருக்கும் தெரியாமல் எப்படி அழிப்பது என்பது குறித்து கூகுளில் தீவிரமாகத் தேடியுள்ளனர்.

கொலையை மறைப்பதற்காகத் தம்பதியினர் கையாண்ட கொடூர வழிமுறைகள் காவல்துறையினரையே திடுக்கிட வைத்துள்ளன. சடலத்தை பாத்ரூமிற்கு எடுத்துச் சென்று துண்டு துண்டாக வெட்டிய மாணிக் உத்தீன், உடலின் சதைப்பகுதிகளைப் பிரித்தெடுத்து பிரியாணி அண்டாவில் போட்டுள்ளார். சதையை மாவு பதத்திற்கு மாற்றுவதற்காக 14 லிட்டர் வினிகர் மற்றும் கெமிக்கல்களை ஊற்றி, பாத்திரத்தின் மூடியை மைதா மாவால் காற்று புகாதவாறு பூசி வைத்துள்ளனர். எஞ்சிய எலும்புகளைத் துண்டாக்கி பிளாஸ்டிக் பைகளில் அடைத்து டிராலி பெட்டியில் வைத்துள்ளனர்.

பின்னர் ஆகஸ்ட் 3-ஆம் தேதி அந்த டிராலி பெட்டியைப் புறநகர் ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் கொண்டு சென்று, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் போட்டுவிட்டுத் தப்பியுள்ளனர். தொடர்ந்து ஆகஸ்ட் 6-ஆம் தேதி விமானம் மூலம் அசாம் தப்பிச் சென்ற இந்த தம்பதியை, தீவிர விசாரணைக்குப்பின் ஒடிசாவில் வைத்துப் போலீசார் கைது செய்தனர். தாம்பரம் காவல் நிலையத்தில் 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற தீவிர விசாரணையில், குற்றவாளிகள் தங்களது கொடூரச் செயலை முழுமையாக ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Nanthini

Recent Posts

“என்னம்மா இது…?” ஹனிமூன் பயணம்… ரயிலில் புதிய நபருடன் நெருக்கமான காதல் மனைவி…! ஷாக்கான கணவர்… சமூக வலைத்தளங்களில் வைரலாகும் சம்பவம்…!!

டார்ஜிலிங்கைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தான் காதலித்த பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு இருவரும் தங்களது…

6 minutes ago

அரசுப் பள்ளியா?… தனியார் பள்ளியா?… கடனாளியாகி மகனைப் படிக்க வைக்கும்… நடுத்தரக் குடும்பங்களின் அதிர்ச்சி முகங்கள்…!!

அரசுப் பள்ளியா அல்லது தனியார் பள்ளியா என்ற குழப்பம் பல நடுத்தரக் குடும்பங்களை வாட்டும் ஒரு பொதுவான கேள்வி. உங்கள்…

12 minutes ago

விஐபி போனாதான் ரோடு போகுமா?… உழைக்கும் மனிதனின் உயிருக்கு விலையே இல்லையா?… மிதிவண்டி ஓட்டுநரைத் தள்ளிவிட்ட காவலர்… வைரல் வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

மும்பையில் விஐபி வாகனம் செல்லும் போது போக்குவரத்து காவலர்களால் மிதிவண்டி ஓட்டுநர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் அவமரியாதை குறித்து சிவசேனா…

13 minutes ago

உயிருடன் வந்த மனைவி… கட்டிப்பிடித்து அழுத கணவர்… குழந்தைகளை காணோமே… கண்கலங்க வைக்கும் வீடியோ வைரல்…!!

நேபாளத்தில் ஏற்பட்ட கொடூரமான வெள்ளப் பேரழிவிற்குப் பிறகு, பல நாட்களாகக் காணாமல் போன மனைவி உயிருடன் மீண்டு வந்து கணவரிடம்…

13 minutes ago

ஐயோ கொடுமையே… காதலியுடன் லுடோ விளையாடிய… பாஜக இளைஞர் தலைவர் படுகொலை… கணவனுடன் சேர்ந்து மனைவி செய்த அதிர்ச்சி காரியம்… பதறவைக்கும் சம்பவம்…!

சிவானி தனது கணவனின் வீட்டில் தனது காதலரான பாஜக இளைஞர் தலைவர் புஷ்பேந்திர லோதியை ரகசியமாகச் சந்திக்க அழைக்க, அவரும்…

32 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் மனுஷனா… போதையில் மனைவியைக் குத்திக்கொன்றுவிட்டு… கால் தவறி விழுந்துவிட்டார் என்று நாடகமாடிய கணவன்… கொளத்தூரில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கொளத்தூர், அன்னை சத்ய நகரைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளி சரண்ராஜ் (36), தனது மனைவி முத்துவாரியம்மாளை (38) திங்கட்கிழமை இரவு…

38 minutes ago