டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்-II தேர்வின் (தொகுதி II மற்றும் IIA பணிகள்) மதிப்பெண்கள், தரவரிசை விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
(அறிவிக்கை எண்.08/2024, நாள்.20.06.2024 மற்றும் அதன் பிற்சேர்க்கைகள்)அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக, 2 ஆம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, 29.8.2025 அன்று, சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு தேர்வான தேர்வுகளின் பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சான்றிதழ் சரிபார்ப்பு & கலந்தாய்விற்கான நேரம், நாள், இதர விவரங்கள் இருக்கும். மேலும் இதன் விவரங்கள் குறுஞ்செய்தி (sms), மின்னஞ்சல் (email) மூலம் அனுப்பப்படும். தனியே அஞ்சல் மூலம் அனுப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டது.
சான்றிதழ் சரி பார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவரும், கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள் என உறுதி அளிக்க முடியாது. பின், தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறிப்பிட்ட நாளில்/நேரத்தில் வர தவறினால், அவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டது.
